ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன் மாடு

ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன் மாடு என்பது ஒரு ஐராப்பிய கறவை மாடு ஆகும் இவை டச்சு மாகாணங்களான வடக்கு ஹாலந்து மற்றும் ஃபிரிஸ்லாந்து பகுதிகளில் தோற்றிய ஒரு மாட்டு இனம் ஆகும். இவை இதனாலேயே இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. மேலும் இவை தற்போது வடக்கு ஜெர்மனி மற்றும் ஜுட்லாண்ட், ஷிலேஸ்விக்-ஹோல்ஸ்டின் ஆகிய பகுதிகளில் பரவியுள்ளன. இவை உலகின் அதிக பால் கறக்கும் கறவை மாடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த மாடுகளே ஐக்கிய அமெரிக்காவில் மிகுதியாக வளர்க்கப்படும் மாடுகள் ஆகும்.
விளக்கம்[தொகு]
இந்த மாடுகள் வெளிநாட்டு பால் மாடுகளில் அளவில் மிகவும் பெரியதாகவும், பெரிய பால் மடிகளையும் கொண்டவை.[1] சில வளர்ந்த மாடுகள் 700 கிலோவரை எடைவரை இருக்கும். இவை பொதுவாகக் கறுப்பு-வெள்ளை, சிவப்பு-வெள்ளை கலந்த நிறத்தில் காணப்படும். 24-27 மாதங்களில் முதல் கன்றை ஈனத் தொடங்கும் இவற்றில் கலப்பு அற்ற மாடுகள் ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும். அதேநேரம் இதன் கலப்பின மாடுகள் 10-15 லிட்டர் பாலை தினசரித் தரும். இவை தரும் பாலில் கொழுப்புச்சத்து குறைவான அளவாக 3.45 சதவீதமே இருக்கும்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ஹோல்ஸ்டியன் –ஃபிரீசியன்". அறிமுகம் (தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்). http://agritech.tnau.ac.in/ta/animal_husbandry/animhus_cattle_breed_exotic_ta.html. பார்த்த நாள்: 29 சனவரி 2017.
- ↑ "எதெல்லாம் அயல் மாடு?". கட்டுரை (தி இந்து). 28 சனவரி 2017. http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/article9505459.ece. பார்த்த நாள்: 29 சனவரி 2017.