ஹைபுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜப்பானிய மொழியில் கவிதையின் வடிவங்கள் பல காணப்படுகின்றன. ஹைக்கூ, சென்ரியு, ரெங்கா, தன்கா என்ற வரிசையில் ஹைபுன் (Haibun, ஜப்பானிய மொழி: 俳文 ) என்ற கவிதை வடிவமும் இடம்பெறுகிறது.

செறிவான உரைவீச்சில் முரணான நிகழ்வுகளை இணைத்தும், ஒரே விதமான சம்பவங்களை கோர்த்தும், அதற்கிணையான ஒரு செறிவான ஹைக்கூவோடு நிறைவு செய்வதே ஹைபுன் ஆகும். ஹைபுன் என்பது தமிழ் உரைநடையிடப்பட்ட பாட்டுடை செய்யுளுடன் ஒப்பிடத்தக்கது.

ஜப்பானிய மொழியில் ஹைக்கூவிற்குப் புகழ்பெற்ற பாஷோ என்பவர் ஹைபுன் கவிதையை முதன் முதலாக எழுதியுள்ளதாக அறியப்படுகிறது.

தமிழில் முதன் முதலாக அறுவடை நாளில் மழை(2003), மாய வரம் (2006) தலைக்கு மேல் நிழல் (2007) என்ற ஹைபுன் கவிதை தொகுதிகள் வெளிந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹைபுன்&oldid=1364749" இலிருந்து மீள்விக்கப்பட்டது