ஹெப்பார் ஐயங்கார்
ஹெப்பார் ஐயங்கார் | |
---|---|
குரு | இராமானுசர் |
மதங்கள் | இந்து |
மொழிகள் | கன்னடம், தமிழ், சமசுகிருதம் |
நாடு | இந்தியா |
மூல மாநிலம் | கருநாடகம் |
மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | கருநாடகம் |
தொடர்புடைய குழுக்கள் | ஐயங்கார் |
ஹெப்பார் ஐயங்கார் அல்லது ஹெப்பர் ஐயங்கார் (Hebbar Iyengar) எனப்படுவோர் கர்நாடகாவில் வாழும் கன்னடம் கலந்த தமிழ் பேசும் ஐயங்கார்கள் ஆவர். இவர்களின் தாய்மொழி தமிழ் ஆகும். ஹெப்பார் ஐயங்கார்கள் பொதுவாக இராமானுஜரால் முன்வைக்கப்பட்ட விசிட்டாத்துவைதம் தத்துவத்தை பின்பற்றுகிறார்கள். இவர்கள் இந்திய மாநிலமான கருநாடகாவில் குறிப்பாக பெங்களூரு, மைசூர், மண்டியா, தும்கூர், சிமோகா மற்றும் கோலார் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றனர்.[1]
சில பிரபலமான ஹெப்பார் ஐயங்கார் மக்கள்
[தொகு]பிரபல யோகாச்சார்யாரான பெல்லூர் கிருஷ்ணமாச்சார் சுந்தரராஜ ஐயங்கார், ஹெப்பார் ஐயங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர். சமையலுக்குப் பிரபலமான மல்லேஸ்வரத்தைச் சேர்ந்த ஆர். ராதாகிருஷ்ணாவின் குடும்பத்தினர், அவரது 81வது பிறந்தநாளில், ஹெப்பார் ஐயங்கார் தளிக்கு என்ற சமையல் குறிப்பு புத்தகத்தை வெளியிட்டனர்..[2] நடிகை வசுந்தரா தாஸ் பெங்களூரில் ஒரு ஹெப்பர் ஐயங்கார் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.hebbarsabha.org/about_us.html
- ↑ Bijur, Anupama (29 May 2021). "Malleswaram Mirror Special: A family recipe". Bangalore Mirror (in ஆங்கிலம்). Retrieved 2025-06-19.
- ↑ "What do Aishwarya Rai, Guru Dutt, Feroz Khan have in common? Take a look at B-wood's Karnataka connection". News18 (in ஆங்கிலம்). Retrieved 2025-06-19.