ஹென்ரிச் ஒல்பெர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹென்ரிச் ஒல்பெர்ஸ்
Olbers Heinrich Wilhelm.jpg
Heinrich Wilhelm Matthäus Olbers
பிறப்புஅக்டோபர் 11, 1758(1758-10-11)
அர்பெர்கென்
இறப்புமார்ச்சு 2, 1840(1840-03-02) (அகவை 81)
பிரெமென்
தேசியம்ஜெர்மனி
துறைமருத்துவம்
வானியல்
அறியப்படுவதுபிறர் முரண்படு மெய்ம்மை
Pallas
Vesta

ஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ் (Henrich wilhelm Matthaus Olbers, அக்டோபர் 11, 1758- மார்ச்சு 2, 1840 ஜெர்மானிய நாட்டில் பிறந்த 19 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த வானவியலாளர். தற்காலப் பேரண்டவியல் கருத்துகளுக்கு முன்னோடியாக அரிய சிந்தனையை எழுப்பியவர். வால்வெள்ளியைக் கண்டறிந்தவர். வால்வெள்ளி வட்டணைகளைக் கணிக்கும் முறையை வகுத்தவர். குறுங்கோள்களான பல்லாசு, வெசுட்டா ஆகியவற்றைக் கண்டறிந்தவர். வானவியலில் பேரார்வம் கொண்டிருந்த இவர் ஒரு புகழ் பெற்ற மருத்துவராகவும் விளங்கினார்.

வாழ்வும் பணியும்[தொகு]

ஓல்பெர்சு இன்றைய பிரேமெனின் ப்குதியாக உள்ள அர்பெர்கனில் பிறதார். மருத்துவராக கோடிங்கென் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.(1777–80). கோட்டிங்கெனில் இருக்கும்போதே ஆபிரகாம் கோதெல்ஃப் காசுட்டெனர் அவர்களிடம் கணிதம் கற்றார். இவர் 1779இல் ஒரு நோய்வாய்பட்ட மாணவருக்கு மருத்துவம் பார்க்கும்போது வால்வெள்ளிகளின் வட்டணைகளைக் கணக்கிடும் வழிமுறையை உருவாக்கினர்.இது அத்துறைக்கே புதிய தடத்தை உண்டாக்கியது. இவரது முறையே வெற்றிகரமாக வால்வெள்ளி வட்டணைகளைக் கணக்கிடும் மிக நிறைவான முறையாகும். இவர் 1780இல் பட்டம் பெற்றதும் பிரேமெனில் தன் மருத்துவத் தொழிலைத் தொடங்கினார். இரவுகளில் வானியல் ஆய்வில் ஈடுபட்டார். அவரது வீட்டு மேல்மாடியே வான்காணக மாயிற்று.

ஓல்பெர்சு 1802 மார்ச் 28இல் பல்லாசு எனும் குறுங்கோளைக் கண்டுபிடித்தார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு1807 மார்ச் 29இல் வெசுட்டா என்ற குறுங்கோளையும் கண்டுபிடித்தார். அதற்குப் பெயரிட கார்ள் ஃபிரெடெரிக் காசு அவர்களுக்கு இசைவு தந்தார். அதுவரை குறுங்கோள் என்ற பெயர் உருவாக்கப்படவில்லை. எனவே இவை சிறுகோள் என்றோ கோளென்று மட்டுமோ அழைக்கப்பட்டன. இப்போது குறுங்கோள்பட்டை உள்ள இடத்தில் முன்பு ஒரு கோள் இருந்ததென்றும் அது அழிந்து சிதறிய துண்டங்களே குறுங்கோள்களாகின என்றும் இவர் முன்மொழிந்தார். அனைத்து இக்கால அறிவியலாளர்களும் வியழன் கோளின் ஓத விளைவால்தான் இவ்விடக் கோள் உருவாதல் தடைபட்ட்து கருதுகின்றனர். On March 6, 1815, Olbers discovered a periodic comet, now named after him (formally designated 13P/Olbers). இவர் ஓல்பெர்சு முரண்புதிரை முதலில் 1823இல் முன்மொழிந்து, பின்னர் 1826இல் அதற்கு மறுவடிவாக்கம் தந்தார். கருநிற இரவு வானம், எல்லையே இல்லாத என்றென்றும் நிலைத்துள்ள நிலையியல் புடவி நிலவலுக்கு முரண்பட்டதாக உள்ளது என்பதே ஓல்பெர்சுவின் முரண்புதிர் ஆகும்.

இவர் 1804இல் இலண்டன் அரசுக் கழக ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்,[1] இவர் 1822இல் அமெரிக்க்க் கலை, அறிவியல் கல்விக்கழகத்துக்கு அயல்நாட்டுத் தகைமை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்,[2] மேலும் 1827இல் சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழகத்தின் அயல்நட்டு உறுப்பினர் ஆனார்.

ஓல்பெர்சு தம் மக்களால் ஃபிரான்சின் நெப்போலியன் II அவர்களுக்கு 1811 ஜூன் 9இல் ஞானக்குளியல் செய்துவைக்க அனுப்பிவைக்கப்பட்டார். இவர் பாரீசில் உள்ள corps legislatif இன் உறுப்பினர் 1812–13. இவர் 81ஆம் அகவையில் பிரேமெனில் இயற்கை எய்தினார். இவர் இருமுறை திருமணம் முடித்தார். இவருக்கு ஒரேயொரு மகன் உள்ளார்.

தகைமைகள்[தொகு]

பின்வரும் வான் நிகழ்வுகள் ஓல்பெர்சுவின் பெயரால் அழைக்கப்படுகிறன:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Library and archive catalogue". Royal Society. 2012-03-06 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Book of Members, 1780–2010: Chapter B" (PDF). American Academy of Arts and Sciences. 7 August 2014 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்ரிச்_ஒல்பெர்ஸ்&oldid=2716055" இருந்து மீள்விக்கப்பட்டது