ஹுவாங் சியான் புயான்

ஹுவாங் சியான் புயான் Huang Xianfan | |
---|---|
பிறப்பு | கான் ஜின்யிங் (甘錦英/甘锦英) நவம்பர் 13, 1899 ![]() |
இறப்பு | சனவரி 18, 1982![]() | (அகவை 82)
தேசியம் | ![]() |
இனம் | சுவாங் |
குடியுரிமை | மக்கள் சீனக் குடியரசு |
பணி | தேசிய மக்கள் பேரவை உறுப்பினர் |
செயற்பாட்டுக் காலம் | 1954-1958, 1980-1982 |
அறியப்படுவது | வரலாற்றாளர், மானிடவியலாளர், கல்வியியலாளர் |
சமயம் | எதுவுமில்லை |
குறிப்புகள் | |
www.china.com.cn [1] |
ஹுவாங் சியான் புயான் (Huang Xianfan, சீன மொழி: 黄现璠; நவம்பர் 13 1899 - ஜனவரி 18 1982) சீன வரலாற்றாளர், மானிடவியலாளர். சுவாங் இனத்தின் முதல் பேராசிரியர். இவர் தற்கால மானிடவியலின் முன்னோடி ஆதலால் சுவாங் மானிடவியலின் தந்தை எனப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]குவாங்சியில் 1899 இல் பிறந்தவர். இவரது தந்தை கான் சின்சாங் ஒரு சுவாங் இனத்தைச் சேர்ந்த ஒரு உழவர். 1935 இல் புகழ்பெற்ற "பெய்ஜிங் கற்பி பல்கலைக்கழகத்தில்" மின் வரலாற்றுத் துறையில் கலைமாணிப் பட்டம் பெற்று யப்பானிய டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்து 1937இல் பட்டத்தைப் பெற்றார். படிப்பை முடித்துக் கொண்டு 1937 இல் சீனா திரும்பி குவாங்சி பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் ஆரம்பித்து விரிவுரையாளராக 1940 வரையில் பணியாற்றினார். அதன் பின்னர் 1941 முதல் 1943 வரை சுன் இ சியன் பல்கலைக்கழகத்தில், 1953 முதல் 1982 வரை குவாங்சி கற்பி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
1957-58களில் வலதுசாரிகளுக்கெதிரான இயக்கத்தின்போது "வலதுசாரி"யென முத்திரை குத்தப்பட்டு, 1961 இல் மன்னிப்பு பெற்றவர். 1978 இல் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவராய் மீண்டும் பொதுவாழ்விலும் மானிடவியல் துறையிலும் தோன்றினார்; சீன இனம் சம்பந்தமான சங்கத்தின் துணைத்தலைவருமானார்.
அவரது ஆய்வுத் துறைகள்: இனத்துவம், இனமுரண்பாடுகள், பண்பாடு, வன்முறையின் மானிடவியல், இனக்குழுமங்களின் வரலாறு, சீனா, யப்பானிய, மற்றும் சுவாங் நபர்கள் போன்றன[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சீன வலை www.china.com.cn/中国网". Archived from the original on 2017-07-01. Retrieved 2009-08-22.