உள்ளடக்கத்துக்குச் செல்

ஹான்ஸ் பிலிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹான்ஸ் பிலிக்ஸ்
ஹான்ஸ் பிலிக்ஸ்

ஹான்ஸ் பிலிக்ஸ் (கேட்க) சுவீடனைச் சேர்ந்தவர். ஜூன் 28, 1928-ல் பிறந்தவர். ஸ்வீடனின் சுதந்திரக் கட்சியைச் சார்ந்தவர். சுவீடனின் வெளியுறவுத்துறை அமைச்சராக 1978 முதல் 1979 வரை பணியாற்றியவர். பின்னர் சர்வதேச அணுசக்திக் கழகத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் ரஷ்யாவின் செர்நோபில் விபத்திற்குப்பின் அவ்விடத்தை ஆய்வுசெய்ய அனுப்பப்பட்ட குழுவிற்கு தலைமை தாங்கினார். ஈராக்கில் நாசகார ஆயுதங்கள் இருக்கின்றனவா என 2002 -ல் சோதனை செய்யச் சென்ற குழுவிற்கும் இவரே தலைமை தாங்கினார். 2010 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட் அரசு தனது நியூக்கிளியர் திட்டத்தின் ஆலோசனைக் குழு பதவியை இவருக்கு வழங்கியது.

ஈராக் சோதனை

[தொகு]

இவர் ஐக்கிய நாடுகள் சபையால் ஈராக்கில் நாசகார ஆயுதங்கள் இருக்கின்றனவா என சோதனை செய்ய அனுப்பப்பட்டார். சோதனையின் முடிவில் அவ்வாறு எதுவும் இல்லை என அறிக்கை சமர்ப்பித்தார்.[1]

புத்தகம்

[தொகு]

இவர் 2004-ல் டிஸ்ஆர்மிங் ஈராக் (Disarming Iraq) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

மேற்சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹான்ஸ்_பிலிக்ஸ்&oldid=3861663" இலிருந்து மீள்விக்கப்பட்டது