ஹரிபாவ் உபாத்யாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டிட் ஹரிபாவ் உபாத்யாயா
அஜ்மீர் மாநில முதலமைச்சர்
பதவியில்
24 மார்ச் 1952 – 31 அக்டோபர் 1956
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்பதவி கலைக்கப்பட்டது
தொகுதிசிறீநகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1892
பௌராசா, பிரித்தானிய இந்தியா
இறப்பு25 ஆகஸ்ட் 1972
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

பண்டிட் ஹரிபாவ் உபாத்யாயா (Haribhau Upadhyaya) ஒரு இந்திய அரசியல்வாதியும் இந்திய சுதந்திர ஆர்வலரும் ஆவார். 1952 முதல் 1956 வரை அஜ்மீர் மாநிலத்தின் முதல்வராக இருந்தார்.

வாழ்க்கை[தொகு]

இவர் 1892 இல் மத்திய பிரதேசத்தின் இன்றைய தேவாஸில் உள்ள பௌராசா கிராமத்தில் பிறந்தார். 1952 இல், ஸ்ரீநகர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக அஜ்மீர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] மேலும் 24 மார்ச் 1952 முதல் 31 அக்டோபர் 1956 வரை அஜ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். 1957 இல் இராசத்தான் சட்டப் பேரவைக்கு கெக்ரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 முதல் 1962 வரை இராசத்தான் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக பணியாற்றினார். அதே தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 முதல் 1967 வரை இராசத்தான் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக பணியாற்றினார். 1966 இல் இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது [2]

இறப்பு[தொகு]

இவர் ஆகஸ்ட் 25, 1972 இல் இறந்தார் [3]

சான்றுகள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Ajmer" (PDF). Election Commission of India website. p. 4.
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  3. "Pandit Haribhau Upadhyaya :: Da'Sahab". Archived from the original on 3 April 2012. பார்க்கப்பட்ட நாள் 18 February 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிபாவ்_உபாத்யாயா&oldid=3785158" இலிருந்து மீள்விக்கப்பட்டது