உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்பாட்-7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்பாட்-7 அல்லது புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களின் (SPOT 7) வரிசையில் ஏழாவது செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி அன்று இந்தியாவின் ஏவூர்தி கொண்டு புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. [1]

வகை

[தொகு]

ஸ்பாட்-7 செயற்கைக்கோளானது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தது. இது பூமியைக் கண்காணிக்க அனுப்பப்பட்டது ஆகும். இது ஒரு சிறிய வகை செயற்கைக்கோள். இதன் எடை 714 கிகி ஆகும். பிரான்ஸ் நாடு இதுவரை ஆறு தடவை இந்த வகையான செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது. ஐரோப்பிய நிறுவனம் (EADS) இந்த செயற்கைக்கோளைத் தயாரித்துள்ளது. [2]

பறப்பாடு

[தொகு]

இந்தியாவில் ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் அமைந்துள்ள விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி-சி23 [3] மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து ஏவப்பட்ட 19ஆவது நிமிடத்தில் விண்வெளியின் 660 கிமீ., தூரத்தில் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டது.

மேற்கோள்

[தொகு]
  1. satellites in space, Modi on cloud nine
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-08. பார்க்கப்பட்ட நாள் 2014-07-07.
  3. விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பாட்-7&oldid=3573575" இலிருந்து மீள்விக்கப்பட்டது