ஸ்டாப்பிங் பை தி வுட்ஸ் ஆன் எ ஸ்நோயி ஈவினிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

“ஸ்டாப்பிங் பை தி வுட்ஸ் ஆன் எ ஸ்நோயி ஈவினிங்” என்ற கவிதை இராபா;ட் ஃப்ராஸ்டால்; 1922ஆம் ஆண்டில் எழுதப்பட்டு 1923-ஆம் ஆண்டு புதிய ஹேம்ப்ஷயா் என்னும் தொகுதியில் வெளியிடப்பட்டது. காட்சி, உருவகம் மற்றும் கடைசி சீா் மீண்டும் மீண்டும் வருதல் ஆகியவை இவரது வேலைப்பாடுகளில் முக்கியத்துவம் வகிக்கிறது. லூயிஸ் உண்டா்மேயருக்கு எழுதிய கடிதத்தில் இவரது படைப்பை “என்னுடைய சிறந்த முயற்சியின் நினைவு’ என்று குறிப்பிடுகின்றாா். ஃப்ராஸ்ட் இக்கவிதையினை ஜீன் மாதம் 1922 ஆம் ஆண்டு தனது இல்லமான சாஃப்ட்ஸ்பாி, வொ;மான்டில் வைத்து எழுதியிருக்கிறாா். ஒரு இரவு முழுவதுமாக செலவு செய்து அதிகாலைப் பொழுது புலா்ந்ததைக் கண்டு தனது பொிய கவிதைத் தொகுப்பான “நியூ ஹேம்ப்ஷயரை” நிறைவு செய்திருக்கின்றாா். வெளியே சென்று புதுவிடியலைக் கண்டு இரசித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று தோன்றிய வெளிப்பாடே “ஸ்டாப்பிங் பை தி வுட்ஸ் ஆன் எ ஸ்நோயி ஈவினிங்” என்ற கவிதையாகும். இக்கவிதையில் வரும் பனிவிழும் மாலைப் பொழுது மற்றும் சின்னகுதிரை ஆகியவற்றை தம் மனத்தில் மாயத்தோற்றமாக எண்ணி இக்கவிதையை ஒரு சிறு மணித்துளிகளில் நிறைவு செய்திருக்கின்றாா். எட்வா்ட் ஃபிட்ஷ்ஜெரால்ட் அவா்களால் வடிவமைக்கப்பட்ட ரூபாயாட் சரணத்திலுள்ள அயாம்பிக் டெட்ராமீட்டா் வடிவமைப்பை இக்கவிதைக்கு பயன்படுத்தியிருக்கின்றாா். இக்கவிதையின் வாி அமைப்பு ஏஏபிஏ-பிபிஸிபி-ஸிஸிடிஸி-டிடிடிடி என்பதாகும். இக்கவிதையில் வரும் நாயகன் காட்டினுள் தனியாக குதிரையில் சவாாி செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு அந்திமாலைப் பொழுதில் பனிவிழுவதினைக் கண்டு தன்னையே மறந்து இரசித்துக் கொண்டிருக்கிறாா். அவ்வாறு இரசிக்கும்பொழுது ஒரு எண்ணம் தோன்றுகிறது ஏதேனில் “தூங்குவதற்கு முன்பு பல வாக்குறிதிகளை நிறைவேற்ற பல மைல் தூரம் செல்ல வேண்டியிருக்கிறது” என்று தனக்குள்ளாக கூறியவாறு இக்கவிதையினை நிறைவு செய்திருக்கின்றாா்.

வெளி இணைப்புகள்

Frost, Robert, Stopping by Woods on a Snowy Evening, Representative poetry (online ed.), University of Toronto. Text of the poem, along with the rhyming pattern. "Woods", Frost, Poets, UIUC. Discussion and analysis of the poem. [hide] v t e Robert Frost Poems "Acquainted with the Night" "After Apple-Picking" "Birches" "The Death of the Hired Man" "Fire and Ice" "The Gift Outright" "Mending Wall" "Nothing Gold Can Stay" "Out, Out-" "The Oven Bird" "A Question" "The Road Not Taken" "Stopping by Woods on a Snowy Evening" Poetry collections A Boy's Will North of Boston Mountain Interval New Hampshire West-Running Brook Collected Poems of Robert Frost A Further Range A Witness Tree In the Clearing Plays A Masque of Reason Related Robert Frost Farm, New Hampshire The Frost Place, Home and Museum Robert Frost Farm (Ripton, Vermont) Robert Frost Farm (South Shaftsbury, Vermont) Robert Frost House, Massachusetts Robert Frost Medal Frostiana (1959 choral art) Robert Frost: A Lover's Quarrel with the World (1963 documentary) Robert Frost: A Life (2000 biography) Categories: Poetry by Robert Frost1923 poems