ஷெல் நிறுவனங்கள், இந்தியா
ஷெல் நிறுவனங்கள் (Shell Companies) மோசடி அல்லது வரி ஏய்ப்பு, பயங்கரவாதத்திற்கான நிதி சேகரித்தல் போன்ற நோக்கங்களுடன், பணத்தை திரட்டும் நிறுவனங்களாகும். இத்தகைய நிறுவனங்கள் எந்தவொரு செயலூக்கமான வர்த்தகமும், தொழிலும் இல்லாத நிறுவனங்கள் ஆகும். ஷெல் நிறுவனங்கள் சொந்தமாக சொத்துக்கள் வைத்துக் கொள்ளாதிருப்பினும், எந்தவொரு வேலைவாய்ப்பும், பொருள் உற்பத்தியும், வணிக நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதில்லை. இந்த போலி நிறுவனங்கள் அல்லது ஷெல் நிறுவனங்கள். பணமோசடி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து பெற்ற கருப்புப் பணத்தை பெற்றுக் கொள்வதும் மற்றும் அதை முதலீடு செய்வதன் மூலம் சட்டபூர்வமான பணத்தை உருவாக்குவதே ஷெல் கம்பெனிகளின் நோக்கமாகும். [1]
ஷெல் நிறுவனங்கள், பொதுமக்கள் அல்லது அரசின் சட்ட அமலாக்கத் துறைகளிடமிருந்து the following தங்கள் நிறுவனத்தின் விவரங்களை மறைக்கப் பல பெரிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய நிறுவனங்கள் சட்டம், 2013, ஷெல் நிறுவனத்தின் நடவடிக்கைகள் மற்றும் அதன் நடவடிக்கை குறித்து வரையறை செய்யவில்லை. எனவே செல் நிறுவனங்கள் சட்டவிரோதமான நிறுவனங்களாக இந்திய அரசு கருதுகிறது.
ஷெல் நிறுவனம் துவக்க காரணங்கள்
[தொகு]புதிதாக துவக்கப்பட உள்ள அல்லது துவக்கப்பட்ட தொழில், வணிக நிறுவனங்களுக்கு தேவையான மூலதனத்திற்கு நிதியைத் திரட்டவே இந்த செல் நிறுவனங்கள் துவக்க முக்கியக் காரணம் ஆகும். [2]
ஷெல் நிறுவனங்கள் செயல்பாடுகள்
[தொகு]கறுப்புப் பணம் அல்லது கணக்கில் வராத பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதில் செல் நிறுவனங்கள் ஒரு இடைத்தரகராகச் செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றச் சம்மந்தப்பட்ட நபரிடமிருந்து 1 லட்சம் பெற்றுக்கொள்கிறது. இந்தத் தொகை பின்னர் ரூபாய் 1௦ மதிப்புள்ள 10,000 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு ஷெல் நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு விற்கப்படுகிறது. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் மதிப்பை 100 மடங்கு அதிகரித்து, இதன் மதிப்பை ரூ. 1 கோடியாக உயர்த்துகிறது. பல சட்டவிரோத நிறுவனங்களின் மூலம், இந்தப் பணம் பின்னர் வெள்ளை பணமாக உண்மையான உரிமையாளருக்கு மாற்றப்படுகிறது.
ஷெல் நிறுவனங்களை அடையாளம் காணுதல்
[தொகு]உயர் பங்குப் பிரீமியங்கள், மிகப்பெரிய அளவு கையிருப்புத் தொகை, பட்டியலிடப்படாத கம்பனிகளில் முதலீடு, பெயரளவு ஊதிய மூலதனம், பூச்சியம் டிவிடெண்ட், பெரும்பான்மையான பங்குதாரர்கள் தனியார் நிறுவனங்களாக இருப்பது, குறைந்த நிலையான சொத்துகள், பெயரளவு செலவுகள் மற்றும் குறைந்த இயக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக மிகப்பெரிய இருப்புகள் மற்றும் உபரி போன்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காண்கின்றன.
இந்தியாவில் உள்ள ஷெல் நிறுவனங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான ஷெல் நிறுவனங்கள், தொழில் நுட்ப நிபுணர்களுடன் கொல்கத்தாவில் இயங்குகிறது.
செல் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள்
[தொகு]- வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்காக பெயரளவில் செயல்படும் ஷெல் நிறுவனங்களுக்கு எதிராக இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, 4.5 இலட்சம் ஷெல் நிறுவன இயக்குனர்களின் பதவிகளை நீக்க இந்திய அரசின் நிறுவனங்களுக்கான அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. [3]
- மேலும் செல் நிறுவனங்களின் பட்டியலை, பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, இந்திய அரசு வெளியிட்டுள்ளது. [4]
- இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம், 331 செல் நிறுவனங்களை பங்குச் சந்தையில் வணிகம் செய்வதை தடைசெய்துள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ What are shell companies?
- ↑ Decoding shell companies
- ↑ 'ஷெல்' நிறுவன விவகாரம்: 4.5 லட்சம் நிறுவன இயக்குநர்கள் தகுதி நீக்கம்?
- ↑ போலி நிறுவனங்களின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு
- ↑ 331 shell company stocks have stopped trading