ஷாகித் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to searchஷாகித்
இயக்குனர் ஹன்சுல் மேத்தா
தயாரிப்பாளர் அனுராக் கச்யப்
சுனில் பொஹ்ரா
ரோணி ஸ்க்ரூ வாலா
சிதார்த்த ராய் கபூர் சைலேஷ் ஆர்.சிங்
கதை சமீர் கௌதம் சிங், அபூர்வா ஆசுராணி, ஹன்சுல் மேத்தா
நடிப்பு

ராஜ் குமார் யாதவ்
டிக்மான்சூொ தூலியா
கே. கே. மேனன்


பிரபல் பஞ்சாபி
விவேக் கமான்டே
முஹம்மத்‌ சீசான் அய்யூப்
இசையமைப்பு காரன் குல்கர்ணி
ஒளிப்பதிவு அனூஜ் தவான்
படத்தொகுப்பு அபூர் வ ஆசுராணி
கலையகம் எ. கே. எப்‌ பி.எல்
விநியோகம் யு.டி.வி. மோஷன் பிக்சர்சு
வெளியீடு செப்டம்பர் 6, 2012 (2012-09-06)( ரொறன்றோ )
அக்டோபர் 18, 2013 (இந்தியா)
கால நீளம் 123 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி இந்தி

ஷாகித் என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படம் ஆகும். கொல்லப்பட்ட ஷாகித் ஆசுமி என்பவரது கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ஹன்சல் மேத்தா இயக்கியுள்ளார்[1][2] ரொறன்றோ பன்னாட்டுத் திரைப்பட விழாவிலும், சிட்டி டூ சிட்டி பிரோக்ராம்-2012 ஆகியவற்றிலும் பங்கெடுத்துள்ளது. [3][4][5] இது அக்டோபர் 18, 2013 அன்று வெளியானது [6]

கதை சுருக்கம்[தொகு]

தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களைக் காணப் பொறுக்காத ஒரு ஏழை இஸ்லாமிய இளைஞன் தான் இந்த ஷாஹித். ஒரு நாள் தன் வீட்டருகில் நடக்கும் கலவரத்தைக் கண்டு அலரும் ஷாஹித் வீட்டைவிட்டு ஓடி ஒரு தீவிரவாத இயக்கத்தில் சேர்கிறான். அங்கு நடக்கும் கோர நிகழ்வுகளைக் கண்டு திரும்பத் தன் வீட்டிற்கு வர அவனை ஒரு தீவிரவாதியென முத்திரை குத்துகிறது இந்த சமுதாயம். அதனால் ஏழு வருட கடுங்காவல் திகார் ஜெயிலில்.

ஜெயிலில் கிடைத்த நல்ல நண்பரின் (கே.கே.மேனன்) உதவியுடன் சட்டத்துறையில் பட்டம் பெற்று சட்ட வல்லுனராகிறான். சிறை வாசம் அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்கிறது. வசதியில்லாதவர்களின் சட்டத் தேவைகளை ஆதாயமின்றி எடுத்து நடத்துகிறார்.

நாட்டில் ஏற்படும் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தன்னைப் போன்ற அப்பாவிகள் தீவிரவாதிகள் என சித்தரிக்கப்படுவதை எதிர்த்து அவர்களுக்காக போராடும் நாயகன். இதனால் எதிர்ப்புகள், கொலை மிரட்டல்கள் என பல்வேறு ஆபத்துகளை எதிர் கொள்கிறார். தான் விரும்பி மணந்த மனைவியுடனும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த நேரமில்லாது சட்டத்தை சவாலாக எடுத்து வாழ முயற்சித்து தன் வாழ்க்கையை தொலைக்கிறார் இந்த ஷாஹித்.

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதாபாத்திரம்
ராஜ் குமார் யாதவ் ஷாகித் ஆசுமி
முஹம்மத்‌ சீசான் அய்யூப் ஆரிப் ஆசுமி
டிக்மான்சூல தூலிய மக்‌பூல் மேமன்
கே. கே. மேனன் வார் சாப்
பிரபல் பஞ்சாபி ஒமர் ஷெய்க்‌
பிரப்லீன் சந்து மறியம்
விவேக் கமான் டே பாஹிம் கான்
பால்ஜீந்தர் கௌர் அம்மி
வைபவ் விசாந்த் காலித் (18 வயசு)

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாகித்_(திரைப்படம்)&oldid=1783646" இருந்து மீள்விக்கப்பட்டது