வொயிட் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வொயிட் அருங்காட்சியகம்
Whyte Museum
நிறுவப்பட்டது 1968
அமைவிடம் கனடா, ஆல்பர்ட்டா, பான்ஃப்
வகை மலை அருங்காட்சியகம்
வலைத்தளம் www.whyte.org/

கனடாவின் ராக்கிஸின் வொயிட் அருங்காட்சியகம் (Whyte Museum of the Canadian Rockies) என்பது கனடாவின், ஆல்பர்ட்டா, பான்ஃப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இங்கு கனடாவின் ராக்கி மலைகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பிற மலைகளின் கலாச்சார பாரம்பரியம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவை சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.  காப்பகமும் நூலகமும் கொண்ட இந்த அருங்காட்சியகம் பான்ப் கலைஞர்களான பீட்டர் மற்றும் கத்தாரின் வொயிட்டி ஆகியோரின்  உத்வேத்தால் உருவானது ஆகும்.[1] 

வரலாறு[தொகு]

இந்த அருங்காட்சியகம் 1968 சூன் 16 அன்று பீட்டர் மற்றும் கத்தாரின் வைட் ஃபவுண்டேஷன் மூலமாக திறக்கப்பட்டது. கனடிய ராக்கிஸின் காப்பகங்கள் அருங்காட்சியகத்தின் தொடக்கப் புள்ளியாக இருந்தன, 1970 ஆம் ஆண்டில் வொயிட் அருங்காட்சியகத்தில், பான்ஃப் நூலகம் இணைக்கப்பட்டது. 1980 களில் கண்காட்சி  இடமானது  பல விரிவாக்கங்களைக்  மேற்கொள்ளப்பட்டு, 1993 இல் புதிய வசதிகளுடன் திறக்கப்பட்டது. கனடாவின் ராக்கி மலைத்தொடரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை வெளிப்படுத்தவும், கனடிய ராக்கிஸிடமிருந்து கலை மற்றும் கலைஞர்களை இந்த அருங்காட்சியகம் சுவீகரித்துக் கொண்டது. பைரன் ஹார்மோனின் புகைப்படங்கள், கனடிய ராக்கிஸின் முன்னோடி புகைப்படக் கலைஞர்களின் படைப்புகள், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.[2]

படங்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டவைகள்: CMA, CHIN, மற்றும் கனடாவின் மெய்நிகர் அருங்காட்சியகம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Canadian Encyclopedia
  2. Holt, Faye Reineberg.

வெளி இணைப்பு[தொகு]