வைதேகி பரசுராமி
வைதேகி பரசுராமி | |
---|---|
![]() 2016 இல் வைதேகி | |
பிறப்பு | 1 பெப்ரவரி 1992 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2010 ஆம் ஆண்டு முதல் |
வைதேகிபரசுராமி சட்டத்தில் பட்டம் பெற்ற இந்திய நடிகை ஆவார். அவர் மும்பை, மகாராஷ்டிரா, இந்தியாவில் பிப்ரவரி 1, 1992 அன்று பிறந்தார்.[1] வைதேகி பரசுராமி முக்கியமாக மராத்தி மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் .மராத்தி திரைப்படமான 'வேட் லாவி ஜீவா' (2010) திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார் .[2]
பிறப்பும் ,இளமை பருவமும்
[தொகு]அவர் மகாராஷ்ட்ரா, மும்பையில் பிறந்தார். அவரது தந்தையார் வைபவ் பரசுராமி, வழக்கறிஞர் மற்றும் தாய் சுனந்த பரசுராமி, வழக்கறிஞர் . அவருக்கு ஒரு சகோதரர், விகரன் பரசுராமி, அவரும் வழக்கறிஞர் ஆவார்.
கல்வி
[தொகு]மும்பையில் உள்ள ஐ .ஈ .எஸ் .பத்மகர் தம்தரே ஆங்கில நடுத்தர முதன்மை பள்ளி யில் ஆரம்ப கல்வியையும், சுலு குருஜி ஆங்கிலம் நடுத்தர பாடசாலையில் இரண்டாம்நிலைப் பள்ளிப் படிப்பைப் படித்தார். மும்பை வர்த்தக மற்றும் பொருளாதாரம், ராம்நிராஜன் ஆனந்திலால் போடார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். சட்டப் படிப்புகளுக்கு அவர் மும்பையில் புதிய சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்ட படிப்பை முடித்தார்.[3] மேலும் இவர் பயிற்சி பெற்ற பாரம்பரிய கதக் நடனக் கலைஞரும் ஆவார்.[4]
சினிமா வாழ்க்கை
[தொகு]மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கிய கோகனஸ்தா திரைப்படத்தில் அவர் அறிமுகம் ஆனார் . பின்னர் அவர் விருந்தவன் படத்தில் நடித்தார் .வைதேகி பரசுராமி ஒரு மராத்தி நடிகை ஆவார் . அவர் ஹிந்தி படமான வஜிரில் அமிதாப் பச்சனுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vaidehi Parashurami birthday story". Divya Marathi (in மராத்தி). 2018-02-01. Retrieved 2021-01-09.
- ↑ "Vaidehi Parshurami movies, filmography, biography and songs - Cinestaan.com". Cinestaan. Retrieved 2021-01-09.
- ↑ "Did you know that Vaidehi Parashurami is a lawyer? - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2021-04-14.
- ↑ "Happy Birthday, Vaidehi Parshurami: Lesser known facts about the actress". The Times of India (in ஆங்கிலம்). 2021-02-01. Retrieved 2021-02-03.