வைக்கிங் ஓல்வர் எரிக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைக்கிங் ஓல்வர் எரிக்சன் (Viking Olver Eriksen) நோர்வே நாட்டைச் சேர்ந்த ஓர் அணு இயற்பியலாளர் ஆவார். 1922 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

நோர்வே நாட்டிலுள்ள இசுடாவங்கர் நகரில் எரிக்சன் பிறந்தார். 1951 ஆம் ஆண்டு கணிதம் மற்றும் இயற்கை அறிவியல் பாடங்களில் கேண்டு ரியல் எனப்படும் பட்டம் பெற்றார். நோர்வே நாட்டின் கெகெல்லர் கிராமத்திலுள்ள அணுக்கரு நிறுவனத்தில் 1952 ஆம் ஆண்டு இயற்பியல் துறையின் தலைவராக பணியில் சேர்ந்தார். இந்த நிறுவனம் இப்போது நோர்வே தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 1965 ஆம் ஆண்டில் இந்த பதவியை விட்டு நீங்கி உதவி இயக்குனரானார். 1968 ஆம் ஆண்டில் சிறிது காலம் நிர்வாக இயக்குநராக இருந்தார். 1971 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை நிரந்தர அடிப்படையில் இந்தப் பதவியை வகித்தார்.[1]

கிழக்கு நோர்வே பகுதியில் உள்ள விகென் மாகாணத்தின் இலில்லெசுட்ரோம் நகராட்சியில் 2014 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6 ஆம் தேதியன்று தனது 91 ஆவது வயதில் இவர் காலமானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Eriksen, Viking Olver". Aschehoug og Gyldendals Store norske leksikon. (2007). Kunnskapsforlaget. 
  2. SNL: Viking Olver Eriksen bio