உள்ளடக்கத்துக்குச் செல்

வேரா கோலோட்னயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேரா வாசிலியேவ்னா கோலோட்னயா
Вера Васильевна Холодная
பிறப்புVera Vasilyevna Levchenko
(1893-08-05)5 ஆகத்து 1893
போல்தாவா, உருசியப் பேரரசு
இறப்பு16 பெப்ரவரி 1919(1919-02-16) (அகவை 25)
ஒடெசா, உக்ரைன் மக்கள் குடியரசு
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1914–1918
வாழ்க்கைத்
துணை
விளதிமிர் கோலோட்னி (தி. 1910)
பிள்ளைகள்2

வேரா வாசிலியேவ்னா கோலோட்னயா (Vera Vasilyevna Kholodnaya; Russian: Вера Васильевна Холодная; 5 ஆகத்து 1893-16 பிப்ரவரி 1919) என்பவர் உருசிய பேரரசைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர் ஏகாதிபத்திய உருசியாவின் ஊமைத் திரைப்படத்தின் முதல் நட்சத்திரம் ஆவார். இவர் நடித்த ஐந்து படங்கள் மட்டுமே இதற்போது எஞ்சியு்ளன. மேலும் இவர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால் 50 முதல் 100 வரை இருக்கலாம் என்ற ஊகிக்கப்படுகிறது[1]

துவக்ககால வாழ்க்கை[தொகு]

இவர் போல்தாவாவில் (உருசியப் பேரரசு, இப்போது உக்ரைன்) பிறந்தார். இவர் தனது இரண்டு வயதில் தன் விதவை பாட்டியுடன் மாஸ்கோவிற்கு குடிபெயர்ந்தார். இவர் பாரம்பரிய பாலே நடனத்தை தன் தொழிலாகக் கொள்ளவேண்டும் என்று கனவு கண்டார். மேலும் போல்ஷோய் தியேட்டர் பாலே பள்ளியில் சேர்ந்தார். சிறுவயதிலிருந்தே. வேரா குடும்ப நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருக்கு 10 வயதாக இருந்தபோது, பிரபலமான பெரெபெல்கினாஸ் கிராமர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பட்டமளிப்பு விழாவில் இவர் விளாதிமிர் கோலோட்னியை சந்தித்தார். அப்போது அவர் ஒரு மாணவராக இருந்தார். மேலும் ஒரு தினசரி விளையாட்டு செய்தித்தாளின் ஆசிரியராகவும், பந்தைய ஓட்டியாகவும் இருந்தார். துவக்கக்கால உருசிய கார் பந்தய வீரர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. 1910 இல் இரு குடும்பங்களின் எதிர்ப்பையும் மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.[1] வேரா அடிக்கடி பந்தயங்களில் அவருடன் சென்றார், இதன் விளைவாக சாலை விபத்துக்கள் ஏற்பட்டன. இவர் தன் கணவரது குடும்பப்பெயரை ஏற்றுக்கொண்டார், இது "குளிர்ந்த ஒன்று" என்று மொழிபெயர்க்கப்படுகிறது. பின்னர், பலர் அதை நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புனைப்பெயராக எடுத்துக்கொண்டனர். இந்த இணையருக்கு எவ்ஜெனியா என்ற மகள் 1912 இல் பிறந்தார். இவர்கள் ஒரு ஆண்டு கழித்து நடா என்ற பெண்ணைத் தத்தெடுத்தனர்.

தொழிலில் ஏற்றம்[தொகு]

வேரா கோலோட்னயா

1908 ஆம் ஆண்டில், வேரா பகழ்பெற்ற நடிகையான பிரான்செஸ்கா டா ரிமினியுடன் வேரா கோமிசார்ஜெவ்ஸ்கயா என்ற முதன்மைப் பாத்திரத்தை ஏற்று நாடகத்தில் நடித்தார். இவர் கோமிசார்ஜெவ்ஸ்காயாவின் கலைத்திறனைக் கண்டு மிகவும் ஈர்க்கப்பட்டார். மேலும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்தார். அதற்காக இவர் முன்னணி உருசிய திரைப்பட இயக்குநரான விளாதிமிர் கார்டினை அணுகினார். அவர் தனது பிரம்மாண்டமான அன்னா கரேனினா படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் இவரை நடிக்க வைத்தார். 1915 இல் உருசிய திரைப்பட இயக்குநரான யெவ்ஜெனி பாயர் சாங் ஆஃப் டிரையம்பன்ட் லவ் (Pesn Torzhestvuyushchey Lyubvi) என்ற திரைப்படத்தை இயக்கவிருந்தார். இது ஒரு மாய காதல் நாடகப் படம் ஆகும். இப்படத்திற்கு நல்ல அழகு கொண்ட ஒரு நடிகையைத் தேடிக்கொண்டிருந்தார். வேரா கோலோட்னயாவை பாயருக்கு அறிமுகப்படுத்தியபோது, இவரது அழகில் கவரப்பட்ட அவர், அந்த பாத்திரத்தை அளிக்க உடனடியாக ஒப்புக் கொண்டார்.[1]

சாங் ஆஃப் டிரையம்பன்ட் லவ் மகத்தான வெற்றியைப் பெற்றது. மேலும் யெவ்ஜெனி பாயர் உடனடியாக கோலோட்னயா நடிக்க தனது மற்றொரு திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார். ஃப்ளேம் ஆஃப் தி ஸ்கை (Plamya Neba) என்ற படமான இது ஒரு மிகை உணர்ச்சி நாடகப் படமாகும். ஒரு மகனைக் கொண்டுள்ள மனைவியை இழந்த வயதான மனிதரை மணந்த ஒரு இளம் பெண்ணின் குற்ற உணர்ச்சி பற்றிய படமாக இது இருந்தது. ஃபிளேம் ஆஃப் தி ஸ்கை சாங் படமானது ஆஃப் ட்ரையம்பன்ட் லவ் படத்திற்குப் பிறகு படமாக்கப்பட்டாலும், அதுவே முதலில் திரைக்கு வந்தது. அப்படமானது வேரா கோலோட்னயாவுக்குப் புகழைப் பெற்றறுத் தந்தது.

முதலில் சிக்கலான உளவியல் நுணுக்கங்களைக் காட்ட முதல்லில் வேராவுக்கு கடினமாக இருந்தது.[2] அதனால் இவர் அஸ்டா நீல்சனின் நடிப்பை முன்மாதிராயாக கொண்டார். ஆனால் பின்னர் படிப்படியாக தனக்கென்று சொந்தமாக ஒரு பாணியை வளர்த்துக் கொண்டார். வேராவின் ஆடம்பரமான உடைகளும், பெரிய சாம்பல் நிற கண்களும் இவரை ஒரு மருமமான திரைத் தோற்றத்தைத் தந்தது. இது உருசியப் பேரரசுமுழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தது.

இவரது அடுத்த படம் தி சில்ட்ரன் ஆஃப் தி ஏஜ் (Deti veka), 1915 இல் வெளியானது.[3] இது சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஒரு நாடகப் படம் ஆகும்.

பியோட்டர் சார்டினினின் சோகப் படமான மெலோடிராமா தி மிரேஜஸ் (1916), அதைத் தொடர்ந்து யெவ்ஜெனி பாயரின் பியூட்டி மஸ்ட் ரீன் இன் தி வேர்ல்ட், மெலோட்ராமா ஃபியரி டெவில் மற்றும் மற்றொரு மிகை உணர்ச்சி நாடகப் படமான எ லைஃப் ஃபார் எ லைஃப் என்ற படத்தில் நடித்தார். இது வேரா கோலோட்னாயாவின் வாழ்க்கையில் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்றாக மாறியது மேலும் இவருக்கு 'தி குயின் ஆஃப் ஸ்கிரீன்' என்ற பட்டத்தை கொண்டு வந்தது சேர்த்தது.[1] இந்த பட்டத்தை இவருக்கு வழங்கிய கவிஞரும், இசையமைப்பாளரும், கலைஞருமான அலெக்சாண்டர் வெர்டின்ஸ்கி இவரை பெரிதும் மதித்து இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்தார். 1916 ஆம் ஆண்டில், கான்ஜோன்கோவின் நிறுவனம் வெர்டின்ஸ்கி மற்றும் கோலோட்னயாவை வைத்து பியர்ரோட் என்ற திரைப்படத்தை உருவாக்கத் தொடங்கியது. ஆனால் கெடுவாய்ப்பாக, படம் முடிக்கப்படவில்லை.

1917 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வேரா கோலோட்னயா நடித்த சிறந்த படங்களில் ஒன்றான பை தி ஃபயர்ப்ளேஸ் (U kamina) வெளியானது. ஒரு பணக்கார காதலனால் உடைக்கப்பட்ட ஒரு குடும்பத்தைப் பற்றிய சோகமான படமாகும். இப் படத்தின் வெற்றியானது அதற்கு முன்னர் உருசியாவில் படமாக்கப்பட்ட அனைத்து படங்களையும் தாண்டியதாக இருந்தது.[1] 1918 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வேரா கோலோட்னயா ஒரு பிரபலமான, போற்றப்படும் நடிகை என்பதிலிருந்து உருசிய திரைப்படத் துறையின் ஒரு அடையாளமாக மாறினார்.[4]

கிராஸ்னயா ஜார்யா (1918), ஜிவோய் ட்ரூப் (1918), தி லாஸ்ட் டேங்கோ (1918) ஆகியவை இவரது பிந்தைய திரைப்படங்களாகும்.[5]

இருப்பினும், கோலோட்னயாவுடன் ஐந்து திரைப்படங்கள் மட்டுமே தற்போதுவரை பாதுகாக்கப்பட்டுள்ளன.[6] எஞ்சியுள்ள படங்களில் தி சில்ரன் ஆப் தி ஏஜ் படமே பழமையானது. தற்போதுள்ள மற்ற நான்கு படங்கள்: தி மிரேஜஸ் (1916), எ லைஃப் ஃபார் எ லைஃப் (1916), எ கார்ப்ஸ் லிவிங் (1918), பி சைலண்ட், மை சோரோ, பி சைலண்ட் (1918) ஆகியவை ஆகும்.

எ லைஃப் ஃபார் எ லைஃப் என்பது கோலோட்னாயாவின் நட்சத்திர அந்தஸ்தை உறுதிப்படுத்திய திரைப்படமாகும்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Vera Kholodnaya Russian silent cinema actress :: people :: Russia-InfoCentre". russia-ic.com. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
  2. Tsivian, Yuri; Taylor, Richard (13 December 2013). Early Cinema in Russia and Its Cultural Reception (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-92837-9.Tsivian, Yuri; Taylor, Richard (13 December 2013). Early Cinema in Russia and Its Cultural Reception. Routledge. ISBN 978-1-317-92837-9.
  3. "Muchnik's Picks: Music in Moscow Over the Weekend | Arts and Ideas". The Moscow Times. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
  4. Feinstein, Elaine (19 March 2006). "Anna of All the Russias". https://www.nytimes.com/2006/03/19/books/chapters/0319-1st-fein.html. 
  5. "L'ENCINEMATHEQUE: La collectionneuse". encinematheque.fr. Archived from the original on 8 May 2016. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
  6. "The Presidential Library to di..." www.prlib.ru. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
  7. Sobolev, R. P. (1961). Liudi i fil'my russkogo dorevoliutsnnogo kino. Moscow: Iskusstvo. pp. 137–38.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேரா_கோலோட்னயா&oldid=3909620" இலிருந்து மீள்விக்கப்பட்டது