வேனில் உறக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சிலுள்ள மான்ட்பாசினில் பெருஞ்சீரக செடியில் உள்ள நத்தைகள்

வேனில் உறக்கம் (Aestivation அல்லது æstivation) என்பது உயர் வெப்பநிலை மற்றும் வறண்ட காலநிலையில் விலங்குகள் தங்களைக் காத்துக்கொள்ளும் வகையில், பனிக்கால உறக்கம் போன்று செயலற்ற தன்மையோடு உறங்கி, குறைந்த அளவிலான வளர்சிதை மாற்ற விகிதத்துடன் செயலற்ற நிலையில் இருத்தல் ஆகும்.[1] இது வெப்பம் மற்றும் வறட்சி மிகுந்த காலங்களான, சூடான உலர் பருவத்தில், பெரும்பாலும் கோடை மாதங்களில் நடக்கும். முதுகெலும்புள்ள மற்றும் முதுகெலும்பு அற்ற விலங்குகள் உயர் வெப்பநிலையிலிருந்து தங்களுக்கு சேதமேற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த வேனில் உறக்கத்தில் ஆழ்கின்றன. நிலவாழ் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் இரண்டும் இந்த உறக்கத்தை அடைகின்றன. இவ்வாறு சில வகை நத்தைகள், பாலைவன ஆமை, சில வகைத் தவளைகள் முதலியவை பெரும்பாலானவை பாலைவன மணலுக்குள் புதைந்துகொண்டு உறங்க ஆரம்பித்துவிடுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Miller, William Charles (2007). Trace Fossils: Concepts, Problems, Prospects. Elsevier. பக். 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-444-52949-7. https://books.google.com/books?id=FLDKUSoFmHMC&pg=PA206. 
  2. என். ராமதுரை (30 ஆகத்து 2017). "பூமி என்னும் சொர்க்கம் 8: நீண்ட தூக்கம்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேனில்_உறக்கம்&oldid=3578324" இலிருந்து மீள்விக்கப்பட்டது