வெள்ளை கூழைக்கடா
வெள்ளை கூழைக்கடா (The great white pelicon) என்னும் பறவை கிழக்கு வெள்ளை கூழைக்கடா , ரோஸி கூழைக்கடா, வெள்ளை கூழைக்கடா என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகை பறவை கூழைக்கடா பறவைகள் குடும்பத்தில் ஒரு வகை பறவையாகும். இவ்வகை பறவைகள் தென்கிழக்கு ஐரோப்பாவிலிருந்து ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா வழியாக, சதுப்பு நிலங்கள் மற்றும் ஆழமற்ற ஏரிகளில் இனப்பெருக்கம் செய்கிறது.
தமிழ்நாட்டில் பள்ளிக்கரணை அருகில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் காணப்பட்டதாக தரவுகளின் மூலம் அரிய முடிகிறது.
வெள்ளை கூழைக்கடா என்னும் இவ்வகை பறவை குறைந்தபட்ச கவலை நிலையில் இருப்பதாக அழிந்து வரும் உயிரினங்களின் IUCN சிவப்பு பட்டியல் (IUCN) மதிப்பிட்டுள்ளது.
இப்பறவை பின் இணைப்பு I வனவிலங்குகளின் புலம்பெயர்ந்த உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான மாநாடு, காட்டுப் பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியப் பறவைகள் ஆணையின் கீழ் இணைப்பு I மற்றும் ஐரோப்பிய வனவிலங்குகள் மற்றும் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான பெர்ன் மாநாட்டின் பின் இணைப்பு II இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 108 சிறப்புப் பாதுகாப்புப் பகுதிகளுக்குள் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய வரம்பில் உள்ள 43 முக்கியமான பறவை பகுதிகளுக்குள் (IBAs) அடங்கும். ஆப்பிரிக்க-யூரேசிய புலம்பெயர்ந்த நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தம் (AEWA) பட்டியலில் இவ்வகை இனமும் ஒன்றாக கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Pelecanus onocrotalus". IUCN Red List of Threatened Species 2018: e.T22697590A132595920. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22697590A132595920.en. https://www.iucnredlist.org/species/22697590/132595920. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Linnaeus, Carl (1758). Systema Naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis (in Latin). Vol. 1 (10th ed.). Holmiae (Stockholm): Laurentii Salvii. pp. 132–133.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Mayr, Ernst; Cottrell, G. William, eds. (1979). Check-List of Birds of the World. Vol. 1 (2nd ed.). Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. p. 189-190.