வெள்ளையாணி தேவி கோவில்
வெள்ளையாணி தேவி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | திருவனந்தபுரம் |
அமைவு: | வெள்ளையாணி |
கோயில் தகவல்கள் |
வெள்ளையாணி தேவி கோவில் என்பது கேரளா, திருவனந்தபுரத்திலுள்ள மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும். வெள்ளையாணி சந்திப்பிலிருந்து 1.5 கி.மீ.வில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் மேலாண்மையின் கீழ் உள்ளது[1] கோவில் அமைப்பு பாரம்பரிய கலை வேலைகளுடன் ஒரு வெண்கலக் கூரை உள்ளது இவைகள் திராவிட கட்டிடக்கலையை கொண்டுள்ளது[2]கோவிலின் கிழக்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் தெய்வங்களின் சிலைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தெய்வங்கள்
[தொகு]இந்த கோவில் பத்திரகாளி தேவியை முதன்மை தெய்வமாகக் கொண்டுள்ளது.வேதங்களின் படி சிவனின் கோபத்தின் ஒரு வடிவமே காளிதேவியாகும். காளி தேவி வடக்கு நோக்கி அமைந்துள்ளது (வடக்கே நடை). சிலை உள்ளூர் மலையாள வார்த்தையில் 'திருமுடி' என்று அழைக்கப்படுகிறது. வெள்ளையாணி கோவிலில் உள்ள தேவியின் சிலை கேரள காளி கோயில்களின் சிலைகளில் மிகப்பெரியது. சிலை உயரமும் அகலமும் நான்கரை அடி. தூய தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் சிலையின் முன் தோற்றத்தை அலங்கரிக்கபட்டிருக்கிறது.
பிற தெய்வங்களான சிவன், விநாயகர் மற்றும் நாகராசரும் வழிபடப்படுகிறது. இந்த கோவிலில் ஒரு சிறிய துணை கோவிலும் உள்ளது, அங்கு மற்றொரு தெய்வம் மாடன் தம்புரான் உள்ளது.
வரலாறு
[தொகு]திருவிழாக்கள்
[தொகு]பூசை நேரம்
[தொகு]தினமும் மாலை 5.30 மணிக்கு கோயில் திறந்து இரவு 8.00 மணிக்கு மூடப்படும். ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், கோயில் மதியம் 12:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை திறந்திருக்கும், இதன் போது தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.அனைத்து மலையாள மாதங்களின் முதல் நாளில், கோயில் காலை 5.30 மணிக்கு திறந்து காலை 8.00 மணிக்கு மூடப்படும்.