வெள்ளில் மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெள்ளில் மன்றம் என்பது புகார் நகரத்தில் இருந்த இடுகாட்டைக் குறிக்கும். இங்குப் பிணங்களைச் சுடாமலும், புதைக்காமலும் அப்படியே எறிந்துவிடுவார்கள். அவற்றைக் கழுகுகள் உண்டு மகிழும். [1] [2]

இந்த வெள்ளில் மன்றத்தில் விளாமரங்களும், வில்வமரங்களும் இருந்தன. எனவே வெள்ளில் மன்றம் என்றனர். வெள்ளில் என்னும் சொல் விளாமரத்தையும், வில்வமரத்தையும், பாடையையும் குறிக்கும். [3] மன்ற விளவின் மனைவீழ் வெள்ளிலால் எயிற்றி மகளும், யானைக்கன்றும் விளையாடுவர் [4] முருகப்பெருமானுக்கு வில்வமரத்து இலைகளைக் கிள்ளிப் போட்டுப் பூசை செய்வர். [5]

மேலும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. அஞ்சுவரப் பாறு இறைகொண்ட பறந்தலை மாகத கள்ளி போகிய களரி மருங்கின் வெள்ளில் நிறுத்த பின்றை - புறநானூறு 360
  2. புள் இறை கொள்ளும் வெள்ளில் மன்றம் - வெள்ளில் மன்றம் மணிமேகலை 6-85
  3. விளவின் வெள்ளில் வல்சி - நற்றிணை 24
  4. புறநானூறு 181
  5. வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெரியாக் கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி - திருமுருகாற்றுப்படை 37
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளில்_மன்றம்&oldid=1988720" இருந்து மீள்விக்கப்பட்டது