வெள்ளறிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெளித்தோற்றத்தில் வேடிக்கையான நடத்தை: ஓருவர் 21 கறுப்புத் தொப்பிகளை நெருப்புப் பொறியில் வைக்கிறார்

வெள்ளறிவு அல்லது சிறுபிள்ளைத்தனம் (Silliness) என்பது "ஒரு நகைச்சுவையான முட்டாள்தனத்தில் " ஈடுபடுவதாக வரையறுக்கப்படுகிறது,[1] "நல்ல அறிவு அல்லது முடிவெடுக்கும் திறன் இல்லாமை",[2] அல்லது "அற்பமான, அல்லது மேலோட்டமான நிலை" ஆகிய நிலைகளை இது குறிக்கிறது.[3] தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வட்டரங்கு ஆகியவற்றில், பார்வையாளர்களை மகிழ்விக்க, மிகைப்படுத்தப்பட்ட, வேடிக்கையான நடத்தை போன்ற முட்டாள்தனத்தின் சித்தரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. கோமாளிகள் மற்றும் கேலி செய்பவர்களால் வழங்கப்படும் முட்டாள்தனத்தின் சித்தரிப்புகள், மருத்துவமனைகளில் உள்ள மக்களின் உற்சாகத்தை உயர்த்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

உளவியல்[தொகு]

"தி ஆர்டு ஆஃப் இரப் அவுசிங்" இல், அந்தோணி டிபெண்ட்டு மற்றும் இலேரி கோகன் ஆகியோர் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர், மகிழ்ச்சி, அன்பு மற்றும் ஆழமான தொடர்பை" வளர்க்கும் விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் ஈடுபடும்போது பெற்றோர்கள் முட்டாள்தனமாக இருக்க வேண்டும் மற்றும் விழுந்து விழுந்து நடிக்க வேண்டும். [4]

வட்டரங்கில்[தொகு]

"மகிழ்ச்சியான முக" ஓவியத்துடன் ஒரு கோமாளி

வட்டரங்கில், கோமாளிகள் விளையாடும் பாத்திரங்களில் ஒன்று முட்டாள்தனத்தில் ஈடுபடுவதாகும். வேடிக்கையான முகபாவனைகள், ஒலியினை உருவாக்குதல் ,வேடிக்கையான நகரும் விளையாட்டிக்களில் ஈடுபடுதல் மற்றும் சிரிப்பது மற்றும் அழுவது போல் நடிப்பது போன்ற தீவிர உணர்ச்சிகள் ஆகிய செயல்களில் இவர்கள் ஈடுபடுவார்கள்.[5]

சான்றுகள்[தொகு]

  1. "silliness - definition of silliness by the Free Online Dictionary, Thesaurus and Encyclopedia". Thefreedictionary.com. பார்க்கப்பட்ட நாள் 2013-07-06.
  2. "Silliness - Synonyms and More from the Free Merriam-Webster Dictionary". Merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 2013-07-06.
  3. "Definition of silliness". Collins English Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2013-07-06.
  4. "The benefits of horseplay - Chicago Tribune". Articles.chicagotribune.com. 2011-08-17. http://articles.chicagotribune.com/2011-08-17/health/sc-health-0817-child-health-roughhous20110817_1_light-touch-physical-fitness-freeze. பார்த்த நாள்: 2013-07-06. 
  5. "Jim Dalling". Jimdalling.com. பார்க்கப்பட்ட நாள் 2013-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளறிவு&oldid=3827696" இலிருந்து மீள்விக்கப்பட்டது