வெளிசந்தை நடவடிக்கைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெளிசந்தை நடவடிக்கை (OPEN MARKET OPERATION) ஒரு நாட்டின் மத்திய வங்கி அதன் பணப்புழக்கத்தை, திறந்த வெளிச்சந்தையில் அதிகரிக்கும் அல்லது குறைக்கும் நடவடிக்கை செயல்பாடு ஆகும்.  இதன்படி ஒரு வங்கிக்கோ அல்லது வங்கிகளின் குழுவிற்க்கோ வழங்குவதற்கான (அல்லது எடுத்துக் கொள்ளும்) ஒரு நடவடிக்கையாகும்.[1] இதனைக்கொண்டு வங்கிகள் திறந்த சந்தையில் அரசாங்க பத்திரங்களை (அல்லது பிற நிதி சொத்துக்களை) வாங்கலாம் அல்லது விற்கலாம்.[2]

நாணயக் கொள்கையை செயல்படுத்துவதற்காக மத்திய வங்கி வெளிசந்தை நடவடிக்கைகளையே (OMO) முதன்மை வழிமுறையாக பயன்படுத்துகிறது. இதன் வழியாக ஒரு வணிக வங்கியுடன் ரெப்போ அல்லது பாதுகாப்பான கடன் பரிவர்த்தனையில் ஈடுபடலாம்: மத்திய வங்கி ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு பணத்தை வைப்புத்தொகையாக வழங்கலாம். அல்லது ஒரு தகுதிவாய்ந்த சொத்தை (அரசாங்க பத்திரங்களையோ அல்லது மற்றவைகளையோ) பிணைய ஒத்திசைவாக எடுத்துக்கொள்கிறது


நோக்கம்[தொகு]

திறந்த வெளிசந்தை நடவடிக்கைகளின் ஒரு முக்கிய நோக்கம் - வணிக வங்கிகளுக்கு பணப்புழக்கத்தை வழங்குவதைத் தவிர, சில நேரங்களில் வணிக வங்கிகளிடமிருந்து உபரி பணப்புழக்கத்தை எடுத்துக்கொள்வதைத் தவிர - குறுகிய கால வட்டி விகிதத்தில் செல்வாக்கு செலுத்துவதாகும். மேலும் அந்நிய செலாவணியை நங்கூரமாகக் கொண்டு இயங்கும் நாடுகளுக்கு, இந்த திறந்த சந்தை செயல்பாடுகள், அந்நிய செலாவணி சந்தையில் நேரடி தலையீடுடாக அமைந்து, மத்திய வங்கிகள் விரும்பிய பரிமாற்ற வீதத்தை பராமரிக்கவும் இது முக்கியமான கருவியாக இருக்கிறது.[3]

மத்திய வங்கிப் பணம் தற்போது காகிதம் அல்லது நாணயங்கள் (பெளதிக பணம்) வடிவத்தில் இல்லாமல் மின்னணு பதிவுகள் (மின்னணு பணம்) வடிவத்தில் இருப்பதால், மத்திய வங்கியில், ஒரு வங்கி தனது இருப்புக் கணக்கில் வைத்திருக்கும் மின்னணு பணத்தின் அளவை அதிகரிப்பதன் மூலமோ அல்லது குறைப்பதன் மூலமோ (வரவு அல்லது செலவு) திறந்த சந்தை நடவடிக்கைகளை நடத்த முடியும். ஒரு நேரடி பணம் செலுத்தும் வங்கி தனது மின்னணு பணத்தின் ஒரு பகுதியை ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களுக்கு எதிராக மாற்றக் கோராவிட்டால், இதற்கு பதிலாக புதிய பெளதிக நாணயத்தை அல்லது நோட்டுகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Baker, Nick; Rafter, Sally (16 June 2022). "An International Perspective on Monetary Policy Implementation Systems | Bulletin – June 2022" (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). Reserve Bank of Australia. பார்க்கப்பட்ட நாள் 13 August 2023.
  2. "Fixed exchange rate policy". Nationalbanken (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 August 2023.
  3. Jeff (2013-09-17). "Federal Reserve: How and Why Do They Change Interest Rates?". Trader Brains Blog. www.radbrains.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிசந்தை_நடவடிக்கைகள்&oldid=3864497" இலிருந்து மீள்விக்கப்பட்டது