வெற்றிலை நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெற்றிலை நகரம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ளது இந்த வெற்றிலை நகரம். இது மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல்லிலிருந்து கொடைக்கானல் செல்லும் பாதையில் இவ்வெற்றிலை நகரம் அமைந்துள்ளது. வத்தலக்குண்டு என்பது இதன் பெயராகும். வத்தலக்குண்டு நகரத்தின் தென்பகுதியில் மேற்கிலிருந்து கிழக்காக மஞ்சளாறு வளைந்து வளைந்து ஓடுகிறது. வெற்றிலைக்குப் பெயர் போன இந்நகரத்தில் முன்னொரு காலத்தில் இங்கு வெற்றிலை அதிகமாகப் பயிரிடப்பட்டது. காலப்போக்கில் இந்நிலை மாறி ஊர்ப்பெயரில் மட்டுமே இது காணப்படுகிறது. இங்கே விளைந்த வெற்றிலைகள் மிகவும் பிரபலமானவையாக இருந்தன. வெற்றிலை நகரத்தின் வழியிலன்றி வேறு வழியில் கொடைக்கானல் மலைக்குச் செல்ல முடியாது.

வெற்றிலைக்குன்று மற்றும் பக்தர்கள் குன்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட நகரமே இன்று காலப்போக்கில் மருவி வத்தலக்குண்டு என்று அழைக்கப்படுகிறது. தியாகி சுப்ப்ரமணிய சிவா அவர்கள் பிறந்ததும் வளர்ந்ததும் சுதந்திரப்போராட்டத்துக்கு தன்னை தயாரித்ததும் இங்கே தான். அப்பேருந்து நிலையத்தை சுற்றியே அரசு மருத்துவமனை, மாரியம்மன் கோயில், வருவாய் அலுவலர் அலுவலகம், கிராம நிர்வக அலுவலர் அலுவலகம், காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகம் அனைத்தும் அமைந்துள்ளது சிறப்பு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிலை_நகரம்&oldid=3600102" இலிருந்து மீள்விக்கப்பட்டது