வெர்கா
Appearance
வானிலையில், வெர்கா (Virga) என்பது ஒரு வகை பொழிவு ஆகும். இங்கு முகிலிலிருந்து விழும் நீர்த்துளி அல்லது பனியானது நிலத்தை அடையும் முன்பே ஆவியாகி விடும். இவ்வகைப் பொழிவானது பாலைவனங்களிலும், மிதமான காலநிலையைக் கொண்ட பிரதேசங்களிலும் பொதுவாக ஏற்படும். வெர்காவானது பல வகை வானிலை நிலமைகளை ஏற்படுத்தக் கூடியது. வெர்கா ஏற்படும் போது அதனைச் சூழ உள்ள வளியின் வெப்பம் குறைவடையும். இது கீழ் நோக்கிய பெருங்காற்றை உருவாக்கலாம். வெர்காவானது சூரியன் மறையும் போது அழகான தோற்றங்களை உருவாக்கும்.
வேறு கோள்களில்
[தொகு]வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தில் சல்பூரிக் அமில வெர்கா வானிலை ஏற்படும். வெள்ளியின் மேற்பரப்பு வெப்பநிலை மிகவும் அதிகம் என்பதால் சல்பூரிக் அமிலம் இடைநடுவிலேயே ஆவியாகி விடும். செவ்வாயில் கூட இந்நிலமை அவதானிக்கப்பட்டுள்ளது.