வெப்பநிலைக்காப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்லறை விற்பனையகத்திலுள்ள ஒரு ஹனிவெல் மின்னியல் வெப்பநிலைக்காப்பி

வெப்பநிலைக்காப்பி (அல்லது) வெப்பநிலை நிறுத்தி (ஆங்: Thermostat) என்பது ஒரு கட்டகத்தின்/அமைப்பின்(System) வெப்பநிலையை உணரும் ஒரு கூறு ஆகும், இது கட்டகத்தின்/அமைப்பின் வெப்பநிலையை விரும்பிய புள்ளியில் பராமரிக்க உதவுகிறது.

பொதுவாக வெப்பநிலைக்காப்பி என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒர் கட்டகத்தையோ அல்லது சாதனத்தையோ வைத்திருக்க பயன்படுத்தும் கட்டுப்பாட்டு கட்டகத்தின் ஒர் வெப்பநிலை உணரும் உதிரி பாகமாகும். வெப்பநிலைக்காப்பி அந்த கட்டகத்தில் உள்ள வெப்பநிலையை உணர்ந்து ஒரு நிலையான வெப்பநிலையை அந்த கட்டகத்தில் நிலைநிறுத்த வெதுப்பிகளையோ (heater) அல்லது குளிர்ப்பிகளையோ (cooler) இயக்கும். உதாரணமாக இது வீடு மற்றும் அலுவலக அறைகளில் பயன்படும் வளிப் பதனம், நீர் வெதுப்பி, வீட்டு சமையல் அறைகளில் பயன்படும் கணப்பு அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி, மேலும் அறிவியல் மற்றும் மருத்துவ துறைகளில் பயன்படும் அடைகாப்பு கருவிகளில் விரும்பிய வெப்பநிலையை தொடர உதவுகிறது.

அறிவியல் இலக்கியங்களில், இந்த வெப்பநிலைகாப்பி கட்டுப்பாட்டு சுமையாக பரவலாக வரையறுக்கப்படுகின்றது(TCL). வெப்பநிலைகாப்பி ரீதியாக கட்டுப்படுத்தப்படும் சுமைகளின் மின்தேவையானது, அமெரிக்காவின் ஒட்டுமொத்த மின்சார தேவைகளில் கிட்டத்தட்ட 50% ஆகும்.[1]

வெப்பநிலைக்காப்பி ஒரு "மூடிய வளைய கட்டுப்பாட்டு" சாதனமாக (Closed Loop Control system) செயல்படுகிறது, ஏனெனில் இது விரும்பிய மற்றும் அளவிடப்பட்ட வெப்பநிலைகளுக்கு இடையிலுள்ள பிழைகளை குறைக்க முயற்சிக்கிறது.

தெர்மோஸ்டாட் என்ற சொல் கிரேக்க வார்த்தையான θερμός thermos, "hot", "வெப்பமான" மற்றும் στατός statos, "standing, stationary", "நிலையான" என்ற வார்த்தைகளிலிருந்து பெறப்படுகிறது.

உணரிகளின் வகைகள்[தொகு]

ஆரம்பகால தொழில்நுட்பங்கள், கண்ணாடியினுள் நேரடியாக செருகப்பட்ட எலக்ட்ரோடுகளை கொண்ட பாதரச வெப்பநிலைமானிகளை உள்ளடக்கியது, எனவே ஒரு குறிப்பிட்ட (நிலையான) வெப்பநிலையை அடைந்தவுடன், தொடர்புகள் பாதரசத்தினால் துண்டிக்கப்படும். இவை ஒரு அளவுக்கு வெப்பநிலையில் துல்லியமாக இருந்தன.

இன்றைய பயன்பாட்டிலுள்ள பொதுவான உணரிகளின் தொழில்நுட்பங்கள் பின்வருமாறு:

  • இரட்டை உலோக இயந்திரம் அல்லது மின் உணரிகள்.
  • விரிவடையும் மெழுக்கு சாதனம்.
  • மின்னணு வெப்பமானிகள் மற்றும் குறைக்கடத்தி சாதனங்கள்.
  • மின் தெர்மோகப்பிள்கள்

இவை கீழே உள்ளவற்றினால் வெப்பத்தை அல்லது குளிரூட்டும் இயந்திரத்தை கட்டுப்படுத்தலாம்:

  • நேரடி இயந்திர கட்டுப்பாடு
  • மின் சமிக்ஞைகள்
  • வாயு சமிக்ஞைகள் சிக்னல்கள்

வரலாறு[தொகு]

1620 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில், டச்சு கண்டுபிடிப்பாளர் கார்னீலிஸ் ட்ரபெல் (1572-1633) என்பவரால் வெப்பநிலைக்காப்பி கட்டுப்பாட்டுக் கருவி செய்யப்பட்ட உதாரணங்களை காணலாம். ஒரு கோழி அடைகாப்புக் கருவியின் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஒரு பாதரச வெப்பநிலைக்காப்பியை அவர் கண்டுபிடித்தார்.[2] இது பதிவு செய்யப்பட்ட பின்னூட்ட கட்டுப்பாட்டிற்குரிய சாதனங்களில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Energy Information Administration, ‘‘Residential energy consumption survey,’’ U.S. Dept. Energy, Washington, DC, Tech. Rep., 2001.
  2. "Tierie, Gerrit. Cornelis Drebbel. Amsterdam: HJ Paris, 1932" (PDF). பார்க்கப்பட்ட நாள் May 3, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பநிலைக்காப்பி&oldid=3711576" இலிருந்து மீள்விக்கப்பட்டது