வெங்கடாசலபதி கோவில், திருவனந்தபுரம்

ஆள்கூறுகள்: 8°28′49″N 76°56′33″E / 8.480391°N 76.942496°E / 8.480391; 76.942496
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sri Venkatachalapathy Temple
வெங்கடாசலபதி கோவில், திருவனந்தபுரம் is located in கேரளம்
வெங்கடாசலபதி கோவில், திருவனந்தபுரம்
Location in Kerala
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
அமைவு:திருவனந்தபுரம்
ஆள்கூறுகள்:8°28′49″N 76°56′33″E / 8.480391°N 76.942496°E / 8.480391; 76.942496
கோயில் தகவல்கள்

வெங்கடாசலபதி கோவில் (Venkatachalapathy Temple) என்பது இந்தியாவிலுள்ள கேரளத்தில் காணப்படும் திருவனந்தபுரத்தில் நிலைகொண்டுள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் தெற்கு பாகத்தின் அருகாமையில் காணப்படும் ஹிந்து மதத்தினர் வழிபடும் கோவிலாகும். இந்தக்கோவிலானது பெருமாள் கோவில் அல்லது ஐயங்கார் கோவில் அல்லது தேசிகரின் சன்னதி என்றும் அறியப்படுகிறது. இந்தக் கோவில் வைணவர்களுக்காகவே 1898 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி, பூதேவி[தொகு]

இந்தக்கோவில் பிரதானமாக வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய தெய்வங்களை வழிபடும் தலமாகும். இந்தக்கோவிலின் உட்புறத்தில் நவநீத கிருஷ்ணன், விஸ்வக்சேனர் மற்றும் கருடர் போன்ற ஹிந்துக்கள் வழிபடும் தெய்வங்களையும் வழிபடுவதற்கான சன்னிதிகள் உள்ளன, மற்றும் ஆழ்வார்கள் மற்றும் வேதாந்த தேசிகரை வழிபடுவதற்கான சன்னிதியும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்களில் ராமானுஜர், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்றோர் அடங்கும்.

தரிசனம், சேவைகள் மற்றும் திருவிழாக்கள்[தொகு]

வைணவ திருவிழாக்கள் ஆன வைகுண்ட ஏகாதசி, திரு ஆடிப்பூரம் மற்றும் ஆடி சுவாதி, ஜன்மாஷ்டமி, ஆழ்வார் திரு நட்சத்திரம் போன்ற பண்டிகைகள் இக்கோவிலில் கொண்டாடப்படுகின்றன. இதர தேசிய மற்றும் மதம்சார்ந்த பொங்கல், தீபாவளி, விஷு, ஓணம், போன்ற பண்டிகை நாட்களில், கோவில் மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.

இந்தக்கோவிலில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான திருவிழா பிரம்மோத்சவம் ஆகும். இந்தத்திருவிழா கொண்டாடும் பொழுது, சிறப்பான பூஜைகள் மற்றும் அபிஷேகம் போன்ற பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படுகின்றன, மேலும் ஒரு ஊர்வலமும் நடத்தப்படுகிறது.

பிரசாதங்கள்[தொகு]

இறைவனுக்குப் படைக்கப்படும் பிரசாதங்களில் புளியோதரை (புளிச்சாதம்), தத்யோன்னம் (தயிர் சாதம்), பொங்கல், சக்கரைப் பொங்கல், எள்ளோதரை (எள்ளுச்சாதம்), கீர் (பாயாசம்), அம்ருத கலசம் மற்றும் சர்க்கரைச்சுண்டல் போன்றவை அடங்கும்.

மேலும் காண்க[தொகு]

  • கேரளத்தில் காணப்படும் கோயில்கள்
  • கேரளத்தில் காணப்படும் ஹிந்து கோயில்கள்