வூ-டாங் கிளான்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வூ-டாங் கிளான் | |
---|---|
![]() வூ-டாங் கிளானும் அவர்களின் துணைவர்களும் பால்ட்டிமோர் நகரில் . | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | ஸ்டாட்டன் தீவு, நியூயார்க் நகரம், நியூ யோர்க், ![]() |
இசை வடிவங்கள் | ராப் இசை |
தொழில்(கள்) | ராப்பர்கள் நடிகர்கள் வணிக நிறுவன அதிபர்கள் இசைத் தயாரிப்பாளர்கள் திரைப்பட எழுத்தாளர்கள் |
இசைத்துறையில் | 1991 – இன்று |
வெளியீட்டு நிறுவனங்கள் | லௌட்/ஆர்சிஏ/பிஎம்ஜி (1993–1998) லௌட்/கொலம்பியா/சோனி இசை (1999–2001) வூ இசைக் குழு/எஸ்ஆர்சி/யுனிவர்சல் மோடவுன்/லௌட் (2007–இன்று) |
உறுப்பினர்கள் | ரிசா ஜிசா மெத்தட் மான் கோஸ்ட்ஃபேஸ் கிலா ரேக்வான் யூ-காட் இன்ஸ்பெக்ட டெக் மாஸ்ட கிலா |
முன்னாள் உறுப்பினர்கள் | ஓல் டர்ட்டி பாஸ்டர்ட் (காலமானார்) |
வூ-டாங் கிளான் (Wu-Tang Clan) நியூயார்க் நகரத்திலிருந்து வெளிவந்த புகழ்பெற்ற ராப் இசைக் குழு ஆகும். இக்குழுவின் தோற்றம் முதல் 2004இல் ஓல் டர்ட்டி பாஸ்டர்டுடைய மரணம் வரை 9 உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழுவின் செல்வாக்க பல ராப் இசைக் கலைஞர்களுடைய இசையில் கேட்கமுடியும்.
1992-1993இல் சகோதரர்கள் ரிசா, ஜிசா, மற்றும் ஓல் டர்ட்டி பாஸ்டர்ட் வூ-டாங் கிளானை தொடங்கினர். இவர்கள் ஷாவ்லின் & வூ-டாங் என்ற சீனக் குங்ஃபு திரைப்படத்தின் பெயரை இக்குழுவுக்கு பெயர்வைத்தனர். 1992இல் இவர்களின் முதலாம் பாடல் "Protect Your Neck" வெளிவந்தது. அடுத்த ஆண்டில் இவர்களின் முதலாம் ஆல்பம் என்டர் த வூ: 36 சேம்பர்ஸ் வெளிவந்து இக்குழு ராப் உலகத்தில் புகழுக்கு வந்தது.
இக்குழுவின் உறுப்பினர்கள் பலரும் நிறைய தனி ஆல்பம்களை படைத்தனர். ரிசா, ஜிசா மற்றும் கோஸ்ட்ஃபேஸ் கிலா அவர்கள் இக்குழுவிலேயே மிக கைகூடிவந்தனர். இக்குழுவின் உறுப்பினர்கள் திரைப்பட நடிகர், திரைப்பட இசையமைப்பாளர், வணிக நிறுவன அதிபர் போன்ற நிலைகளில் பணி புரிந்தனர்.
குழு படைத்த ஆல்பம்கள்[தொகு]
- என்டர் த வூ: 36 சேம்பர்ஸ் (1993)
- வூ-டாங் ஃபொரெவர் (1997)
- த W (2000)
- அயர்ன் ஃபிளாக் (2001)
- 8 டயகிராம்ஸ் (2007)