வீர கேரளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்கு நாட்டில் உள்ள தென் கொங்கு பகுதி வீர கேரளர்கள் ஆட்சியிலும், வடகொங்கு கொங்குச் சோழர் ஆட்சியிலும் (கோநாட்டார்) இருந்தன. வீர கேரளர்கள் தோற்றம் பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. கே.வி.சுப்ரமணிய ஐயர் கூறும் போது இடைக்கால சேரர்களைத்தொடர்ந்து ஆட்சி செய்த கேரள மரபினரே வீர கேரளர் என்கிறார். பேராசிரியர் வீ.மாணிக்கம் அவர்கள் கோக்கண்டன் மரபில் வந்தவர்களே வீர கேரளர் என்கிறார். ரா.ஜெகதீசன் என்பார் பாண்டியர் மரபில் இருந்து வந்தவர்கள் என்கிறார். இக்கருத்துக்கள் ஆய்வுக்குரியது. தென் கொங்கு பகுதியில் வீர கேரளர்கள் சுமார் 250 ஆண்டுகள் (கி.பி.958-1200) ஆண்டுள்ளனர் என்பது கல்வெட்டுகள் வாயிலாகத் தெரிய வருகிறது.

வீர கேரள மன்னர்கள்[தொகு]

வீரகேரள அரசர்களின் பட்டியல்: [1]

  1. வீர கேரள வீர நாராயணன் - (கி.பி.958-967)
  2. வீர கேரளன் அமரபுயங்கந்-(கி.பி.967-990)
  3. வீர நாராயணன் அதிசய சோழன்-(கி.பி.990-1021)
  4. அதிசய சோழன் வீர நாராயணன் -(கி.பி.1021-1040)
  5. வீர நாராயணன் வீர கேரளன்-(கி.பி.1040-1069)
  6. வீர கேரளன் அதிராஜன்-(கி.பி.1069-1092)
  7. அதிராஜராஜன் ஸ்ரீ ராஜ ராஜன்(கி.பி.1092-1129)
  8. ராஜ ராஜன் கரிகாலன் -(கி.பி.1129-1149)

மேற்கோள்கள்[தொகு]

  1. தி.சி.ஸ்ரீதர். (2005). கோயம்புத்தூர் மாவட்டத்தொல்லியல் கையேடு. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. pp. 34–39. {{cite book}}: |access-date= requires |url= (help)CS1 maint: date and year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_கேரளர்&oldid=2577118" இலிருந்து மீள்விக்கப்பட்டது