வீரம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரம்மாள் (பிறப்பு 16 மே 1924) சமூகச் செயற்பாட்டாளர், சாதி மறுப்பாளர் மற்றும் தலித்திய முன்னோடி ஆவார். [1]

பிறப்பும் படிப்பும்[தொகு]

தமிழ்நாடு திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை வேம்பு என்பவர் எளிய விவசாயியாகவும் தொடர் வண்டித்துறையில்  பணியாளாகவும் இருந்தவர்.

வீரம்மாளின் இயற்பெயர் வீராயி. இவர் ஜீயர்புரம் நடுநிலைப் பள்ளியிலும் பின்னர் குளித்தலை உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். திருச்சி வானொலி நிலையத்தில் ஒரு முறை பேசும் வாய்ப்புக் கிட்டியதால் அங்கேயே வானொலி நிலையக் கலைஞராகப் பணி செய்ய அமர்த்தப்பட்டார்.

திருமணம் ஆகித் தம் கணவரின் குடிப் பழக்கம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவரின் எண்ணப் போக்கு மாறியது. தம்மை அழகுபடுத்துவதை நிறுத்திக் கொண்டார். பகுத்தறிவும் சமூகச் சிந்தனையும் கொண்டார். தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்கு அவர்களுக்குக் கல்வி அளிப்பதே சிறந்த வழி என முடிவு செய்தார். பெரியார் ஈ வே.இராசாமியுடன் தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி அவரைச் சந்தித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

பணிகள்[தொகு]

சாதியால்  ஒடுக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கத்தில் கல்விப் பணியில் ஈடுபட்டு 1943 இல் ஒரு தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார். 1954 இல் தாழ்த்தப்பட்டோர் பெண்கள் நலச் சங்கம் ஒன்றை நிறுவினார். முதியோர் பள்ளி, இரவுப் பள்ளி  ஆகியவற்றையும் நடத்தினார். வீரம்மாள் தொடங்கிய அமைப்பு அன்னை ஆசிரமம்  என்னும் பெயரில் திருச்சிராப்பள்ளியில் பெரிய கல்வி நிறுவனமாக மலர்ந்தது. இதனில் குழந்தைகள் இலவசக் காப்பகம்,  குடும்ப நலப்பள்ளி மையம்,  உடல் ஊனமுற்ற குழந்தைகள் இல்லம்,  பணி புரியும் பெண்கள் நலவிடுதி போன்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன.

சான்றாவணம்[தொகு]

இது என் வாழ்க்கைக் கதை, நூல்-அன்னை ஆசிரமம் வெளியீடு  திருச்சி (1996)

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-15. பார்க்கப்பட்ட நாள் 2017-01-06.

மேலும் பார்க்க[தொகு]

Tamil Dalit Writing, Oxford University Press

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரம்மாள்&oldid=3572130" இலிருந்து மீள்விக்கப்பட்டது