வீரசிங்காதன புராணம்
தோற்றம்
வீரசிங்காதன புராணம் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன.
வீரசிங்காதனப் புராணம் என்னும் நூல் சிவப்பிரகாசருடைய தம்பி வேலைய சுவாமிகளாலும், பின்னர் கோட்டூர் உமைபாக தேவராலும் பாடப்பட்டது. வேலைய சுவாமிகள் 387 பாடல்கள் பாடினார். இவர் 1719-ல் காலமானார். பின்னர் உமைபாக தேவர் மேலும் 488 பாடல்கள் பாடி நூலை நிறைவுசெய்தார். தக்கயாகப் பரணி நூல் தோன்றிய முறைமை பற்றி இதில் கூறப்படும் கதை முழுவதும் கற்பனை. [1]
மற்றொன்று உமாபதி சிவாசாரியர் எழுதினார் எனவும் தெரியவருகிறது. இது பற்றிய வேறு செய்தி ஏதும் கிடைக்கவில்லை.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 343
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005