உள்ளடக்கத்துக்குச் செல்

வீட்டு வேலைக்கான ஊதியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீட்டு வேலைக்கான சர்வதேச ஊதிய பரப்புரை (IWFHC) ( International Wages for Housework Campaign) என்பது ஒரு வீட்டிலும் வெளியிலும் உள்ள அனைத்து கவனிப்பு வேலைகளிலும் ஈடுபடும் அடிமட்ட பெண்களுக்கும் அங்கீகாரம் மற்றும் பணம் வழங்க பிரச்சாரம் மேற்கொண்டதனைக் குறிப்பதாகும். இது 1972 இல் செல்மா ஜேம்சு [1] இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த மூன்றாவது தேசிய மகளிர் விடுதலை மாநாட்டில் வீட்டு வேலைக்கான ஊதியக் கோரிக்கையை முதலில் முன்வைத்தார். இந்த பரப்புரை இயக்கம் சர்வதேச அளவில் குறைந்த அதிகாரம் கொண்டவர்களுக்காக முதலில் பரப்புகளில் ஈடுபடுவதாகக் கூறுகின்றனர் - வீட்டில் வேலை செய்யாத தொழிலாளர்கள் (தாய்மார்கள், இல்லத்தரசிகள், வீட்டுப் பணியாளர்கள் ஊதியம் மறுக்கப்படுகிறவர்கள்), மற்றும் நிலம் மற்றும் சமூகத்தில் ஊதியம் பெறாத வாழ்வாதார விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களையும் உள்ளடக்கியது.

வரலாறு

[தொகு]

உருவாக்கம்: 1970 கள்

[தொகு]

வீட்டுவேலைக்கான ஊதியம் என்பது விமன், தெ யூனியன்சு அண்ட் வொர்க் ஆர் வாட் இஸ் நாட் டு பீ டன் என்பதன் ஆறு கோரிக்கைகளில் ஒன்று,இந்த ஆறு கோரிக்கைகளை [2] மான்செஸ்டர் மாநாட்டிற்குப் பிறகு, ஜேம்ஸ் மூன்று அல்லது நான்கு பெண்களுடன் சேர்ந்து லண்டன் மற்றும் பிரிஸ்டலில் பவர் ஆஃப் வுமன் கலெக்டியை உருவாக்கி வீட்டு வேலைக்கான ஊதியத்திற்காக பிரச்சாரம் செய்தார். இது 1975 இல் லண்டன், பிரிஸ்டல், கேம்பிரிட்ஜ் மற்றும் பின்னர் மான்செஸ்டரை அடிப்படையாகக் கொண்ட வீட்டு வேலை பிரச்சாரத்திற்கான ஊதியமாக மறுசீரமைக்கப்பட்டது. [3]

1974 இல், வீட்டு வேலைக்கான ஊதியப் பரப்புரை இத்தாலியில் தொடங்கியது. சலாரியோ அல் லாவோரோ டொமெஸ்டிகோ (வீட்டு வேலைக்கான ஊதியம்) என்று பல குழுக்கள் பல்வேறு இத்தாலிய நகரங்களில் உருவாக்கப்பட்டன. இதனைக் கொண்டாடும் விதமாக, நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான மரியரோசா டல்லா கோஸ்டா, இத்தாலியின் மேஸ்ட்ரேவில் "ஒரு பொது வேலைநிறுத்தம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த உரையில் அவர் முன்பு பெண்களுக்கான எந்த வேலைநிறுத்தமும் ஒரு பொது வேலைநிறுத்தமாக கருதப்பட்டது இல்லை, ஆனால் ஆண் தொழிலாளர்களுக்கான வேலைநிறுத்தம் மட்டுமே பொது வேலை நிறுத்தமாக கருதப்படுவதாக இவர் கூறினார். இத்தாலியின் படுவாவில் , மாரியரோசா டல்லா கோஸ்டா மற்றும் சில்வியா ஃபெடெரிசி ஆகியோரால் உருவாக்கப்பட்ட லோட்டா ஃபெமினிஸ்டா என்ற குழு, வீட்டு வேலைக்கான ஊதியம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டது. [4] [5] [6]

1974 மற்றும் 1976 க்கு இடையில், மூன்று தன்னாட்சி அமைப்புக்களை பிரிட்டன் , அமெரிக்கா மற்றும் கனடாவில் வீட்டு வேலை ஊதியத்திற்கான இயக்கத்தினை உருவாக்கினர். அகனள்களுக்கான ஊதியம், பாலியல் தொழில் குழுவினருக்கான ஊதியம், கறுப்பினப் பெண்களுக்கான வீட்டு வேலைக்கான ஊதியம் ஆகிய நிறுவனங்களை மார்கிரட்டு பிரசுகோத்துடன் இணைந்து நிறுவினார்.[7] [8] [9] [10] இதில் "அடிமைத்தனம், ஏகாதிபத்தியம் மற்றும் காலனித்துவம்" ஆகியவற்றுக்கான இழப்பீடு கோருவது உட்பட. ஊதியத்திற்குரிய அகனள்களுக்கான வீட்டு வேலைக்கான ஊதியத்தையும் அகனள்களுக்கான கூடுதல் ஊதியத்தை பெறவும் பரப்புரை செய்தனர் "ஊதியங்கள் காரணமாக அகனள் 1974 இல் நிறுவப்பட்ட மற்றும் சியாட்டலை மையமாகக் கொண்ட தி லெஸ்பியன் எனும் தாய்மார்களின் தேசிய பாதுகாப்பு நிதியத்துடன் இணைந்து பணியாற்றினார், பின்னர், காவல் வழக்குகளுக்கு எதிராக போராட வேண்டிய அகனள் தாய்மார்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. [11] [12] 1984 இல் இன்விசிபிள் (புலப்படும் மற்றும் கண்ணுக்கு தெரியாத குறைபாடுகள் உள்ள பெண்கள்) இங்கிலாந்தில் IWFHC க்குள் ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது. [13] [14]

சான்றுகள்

[தொகு]
  1. "International Wages for Housework Campaign | UIA Yearbook Profile | Union of International Associations". uia.org. 2020. Archived from the original on 2020-12-05. பார்க்கப்பட்ட நாள் 18 June 2020.
  2. "Women, the Unions and Work or...What is Not to be Done and the Perspective of Winning". www.akpress.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 June 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "The Campaign for Wages for Housework" (PDF). bcrw.barnard.edu. Barnard Center for Research on Women. 1975. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
  4. Dalla Costa, Mariarosa (21 October 2010). "A General Strike".
  5. "More Smiles, More Money", N+1 Magazine, August 2013.
  6. Tronti, Mario (1962). "Factory and Society". Operaismo in English. பார்க்கப்பட்ட நாள் 6 May 2017.
  7. Hendrix, Kathleen (May 1987). "Waging the War Over Wages: Fight for Homemaker Pay has Seen Ups, Downs". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் 6 November 2015.
  8. "The International Wages for Housework Campaign" (PDF). Freedomarchives.org. The Freedom Archives. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
  9. "Campaign Catches On: L.A. Pair Seek Wages for Women's Unpaid Work". 28 July 1985. http://articles.latimes.com/1985-07-28/news/vw-5698_1_unpaid-work. பார்த்த நாள்: 22 October 2015. 
  10. Feminists Who Changed America, 1963–1975. University of Illinois Press.
  11. The A to Z of the Lesbian Liberation Movement: Still the Rage. Scarecrow Press.
  12. "The Lesbian Mothers National Defense Fund, the 1970s through 1990s". outhistory.org. Out History. பார்க்கப்பட்ட நாள் 6 November 2015.
  13. "Tribunal victory gives hope to 'failure to attend' benefit victims". Disability News Service (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2020-02-27. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  14. "Written evidence submitted by WinVisible (COV0106)". WinVisible. 2020-05-01. Archived from the original on 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டு_வேலைக்கான_ஊதியம்&oldid=3634227" இலிருந்து மீள்விக்கப்பட்டது