விவேக் ரகுநாத் பண்டிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேக் பண்டிட்
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
முன்னையவர்ஹிதேந்திர தாக்கூர்
பின்னவர்ஹிதேந்திர தாக்கூர்
தொகுதிவசாய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
விவேக் பண்டிட்

23/08/1957
அரசியல் கட்சிசுயேச்சை வேட்பாளர்

பாவ்  என்றழைக்கப்படும் விவேக் ரகுநாத் பண்டிட் இந்தியாவைச் சேர்ந்த  சமூக சேவகர் ஆவார். மும்பையில் தனது கல்வியை முடித்த இவர், அங்கிருந்து வெளியேறி தனது மனைவி வித்யுலதாவுடன் மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களுக்குச் சென்று ஏழை மக்களுக்கு உதவும் வகையில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கினார். 1982 ஆம் ஆண்டுகளில், இவரது சமூக சேவைகளின் ஆரம்ப கட்டத்தில் வசாயில் உள்ள தாஹிசார் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்காக  ஷ்ரமஜீவி சங்கதனா என்ற அமைப்பை நிறுவி அதன்மூலம் பல்வேறு கொத்தடிமை தொழிலாளர்களை விடுவித்துள்ளார். இத்தகைய சிறந்த பணிக்காக இவருக்கு 1999 ஆம் ஆண்டில் சர்வதேச அடிமை எதிர்ப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் சிவசேனாவின் ஆதரவுடன் சுயேச்சையாக மகாராஷ்டிர மாநிலத்தின் வசாய் தொகுதியில் போட்டியிட்டு வென்று,  அங்கிருந்து மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிவ சேனாவின் ஆட்சிக்காலத்தில் அம்மாநில அளவிலான பழங்குடியினர் பகுதி ஆய்வுக் குழுவின் தலைவராக, மகாராஷ்டிரா அரசின் மாநில அமைச்சர் அந்தஸ்துடன் பணியாற்றியுள்ளார். [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_ரகுநாத்_பண்டிட்&oldid=3799822" இலிருந்து மீள்விக்கப்பட்டது