விவேகானந்தா நகர் உள்விளையாட்டு வளாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேகானந்தா நகர் உள்விளையாட்டு வளாகம்
Vivekananda Nagar Indoor Sports Complex
முழுமையான பெயர்விவேகானந்தா நகர் உள்விளையாட்டு வளாகம்
முன்னாள் பெயர்கள்இந்தூர் விளையாட்டு வளாகம்
அமைவிடம்விவேகானந்தா நகர், நாக்பூர், மகாராட்டிரம்
இருக்கை எண்ணிக்கை5,000
Construction
Broke ground2014
திறக்கப்பட்டது2014

விவேகானந்தா நகர் உள்விளையாட்டு வளாகம் (Vivekananda Nagar Indoor Sports Complex) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. மேசைப் பந்து, இறகுப்பந்து போன்ற போட்டிகளுக்காக நாக்பூர் நகராட்சி ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட 3.5 ஏக்கர் நிலத்தில் விளையாட்டரங்கம் கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் 5,000 பேர் அமரும் வசதி உள்ளது. பல அரசியல் நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பூப்பந்து, கூடைப்பந்து, புல்வெளி டென்னிசு போன்ற விளையாட்டு நிகழ்வுகள் இங்கு நடைபெறுகின்றன.[1][2][3]

300 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 50 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்துடன் 3 603 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த அரங்கம் நகரின் இரண்டாவது உள்ளரங்க அரங்கமாகும். தென்மேற்கு நாக்பூரில் உள்ள இந்த முதல் விளையாட்டு மைதானத்தில் சிற்றுண்டிச்சாலை, நிர்வாக அலுவலகம் மற்றும் உடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பறைகள் ஆகியவை உள்ளன. இதன் கட்டுமானத்திற்காக 3 கோடி செலவானது.[4]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]