உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் ஆடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் ஆடம்
வில்லியம் ஆய்க்மேன் என்ற ஓவியர் வரைந்த உருவப்படம், 1727
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 1689
இறப்பு24 ஜூன் 1748 (58 வயதில்)
பணி
கட்டிடங்கள்ஹோப்டவுன் ஹவுஸ்
மேவிஸ்பேங்க் ஹவுஸ்
டஃப் ஹவுஸ்
பொல்லோக் ஹவுஸ்

வில்லியம் ஆடம் (1689 – 24 ஜூன் 1748), ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுனர் ஆவார். இவர் ஸ்காட்லாந்தில் பல வீடுகளையம் அரசுக் கட்டிடங்களையும் கட்டினார், எடின்பர்க் அருகில் இருந்த ஹோப்டன் ஹவுஸ் என்ற கட்டிடமும், பான்ஃபில் இருந்த டஃப் ஹவுஸ் என்ற கட்டிடமும் இவரது புகழை பறைசாற்றின. இவர் கட்டிடங்களை பல்லேடிய கட்டிடக்கலை அடிப்படையில் கட்டினர்.

இவரது கட்டுந்திறன் மற்றையோரிடம் இருந்து வேறுபட்டிருப்பதாக கட்டிடக்கலை திறனாய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.[1] இவர் நிலக்கரி எடுத்தல், கல் உடைத்தல் போன்ற தொழில்களிலும் நாட்டம் செலுத்தி இருந்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

இளமைப்பருவம்[தொகு]

இவர் அப்பாட்ஷல் என்ற ஊரில் பிறந்தார்.[2] இவரது பெற்றோர் ஜான் ஆடம், ஹெலன் கிரான்சுடவுன் ஆவர். 1717ஆம் ஆண்டுவாக்கில் இவர் கிர்கால்டி கொத்தனார் சங்கத்தில் உறுப்பினராகவிருந்தார்.[3] பின்னர், பிரான்சு நாட்டிற்கும், அண்டை நாடுகளுக்கும் சென்று அங்கிருந்த கட்டிடங்களைப் பார்வையிட்டார்.[3] அக்காலத்தில் கட்டிடக்கலையில் கவனம் செலுத்தி கற்றுவந்தார்.

பின்னர், 1716ஆம் ஆண்டுவாக்கில் மேரி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.[4]

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கட்டப்பட்ட ஹோப்டவுன் ஹவுஸ் கட்டிடத்தின் கிழக்கு வாயில்

புகழ் அடைதல்[தொகு]

1721 ஆண்டில் புளோர்ஸ் காசில் என்ற பெருங்கட்டிடம் கட்டுந்திட்டத்தில் பங்கேற்றார்., இவருக்கு கட்டிடக்கலைத்துறையினருடனும், நிதிநிர்வாகிகளிடம் தொடர்பு இருந்தது.[5] இவருடைய அரசியல் நிலைப்பாடு ஆட்சியாளர்களுடையதை ஒத்திருந்ததால், இவருக்கு பல கட்டுமானப்பணிகள் கிடைக்கப்பெற்றன.[6][7] 1730ஆம் ஆண்டில், வடக்கு பிரிட்டனில் இருந்த ஆயுதக் கட்டுமானக்குழுவில் முதன்மை கட்டுமானத் தொழிலாளராக நியமிக்கப்பட்டார்.[8]

Colen Campbell's design for Wanstead House

ஆடமும், சர் ஜான் கிளெர்க்கும் லண்டனுக்கு சென்று அங்கிருந்த கிளிவ்டென் வில்டன் வான்ஸ்டெடு ஹவுஸ் ஆகிய கட்டிடங்களை பார்வையிட்டனர்.[9]

தொழில்[தொகு]

இவர் கட்டிடக்கலையில் மட்டுமல்லாது, சுரங்கந்தோண்டுதல், உப்பெடுத்தல், கல்லுடைத்தல், வேளாண்மை ஆகிய தொழில்களில் பங்கேற்றார்.[10] 1728ஆம் ஆண்டில் எடின்பர்க் நகரத் தலைவராக பதவியில் அமர்த்தப்பட்டார்.[11] கவ்கேட் என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்த பின்னர், பெருங்கட்டிடங்கட்டினார்.[12]

அவருக்கு கிடைத்த கட்டுமானத் திட்டங்களுக்கு அவருடைய கல்குவாரிகளில் இருந்து கற்களை எடுத்துப் பயன்படுத்தினார்.[13] பின்னர், நிலக்கரிச் சுரங்கம், சேமிக்குக் கிடங்கு போன்றவற்றையும் ஏலத்தில் எடுத்து நடத்தி வந்தார்.[14] 1741ஆம் ஆண்டில், கின்ரோஸ்-ஷைர் என்ற இடத்தில் பெரும் நிலப்பரப்பை வாங்கி, பிளேர் ஆடம் என்று பெயர் சூட்டினார்.[15] அவ்விடத்தை விரிவாக்கியும், மரங்களை வளர்த்தும் நிலக்கரிச் சுரங்கம் ஏற்படுத்தியும் தொழில் நடத்தினார். அங்கே மேரிபர்க் என்ற சிற்றூரை உருவாக்கி, சுரங்கத் தொழிலாளர்களுக்காக வீடும் கட்டினார்.[16]

இறுதிக்காலம்[தொகு]

இவர் டஃப் ஹவுஸ் கட்டிய போது தரப்பட வேண்டிய ஊதியம் வழங்கப்படவில்லை. திட்டத்தை ஏற்றுக்கொண்ட போது ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை. அத்துடன் கல்சிற்பத்தில் செய்யப்பட்ட கலைவேலைப்பாட்டுக்கு பணம் வழங்க மறுத்துவிட்டார் திட்டத்தை வழங்கியவர். அதனால், ஆடம் நீதிமன்றத்தை அணுகி, சாதகமான தீர்ப்பு பெற்றார்.[17] இருந்தபோதும், திட்டத்தை வழங்கிய புருஸ், பிடிவாதமாக இருந்து, ஆடம் சாகும் காலம் தருவாயை அடையும் வரை வழக்கை இழுத்தடித்தார்.[13]

இவரது மூன்று மகன்களும் குடும்பத் தொழிலையே கவனித்து வந்தனர். இவரது ஆளுமையை பயன்படுத்தி, ஆயுதக் கிடங்கு கட்டுமானக் குழுவில் தன் மகனுக்கு பொறுப்பு வாங்கித் தர முயன்று, தோற்றார்.[18]

இவர் 1747 ஆண்டில் உடல்நலம் குன்றி இறந்தார். எடின்பர்க்கிலேயே இவரது உடல் புதைக்கப்பட்டது.[19] இவரது மகன் கட்டிய குடும்ப நினைவகம் ஒன்று இவரது இறப்பிற்கு பின்னரான 20ஆம் ஆண்டில் எடின்பர்க் நகர மன்றத்தால் சீரமைக்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

 1. McWilliam, p.57
 2. Gifford (1989), pp.68 & 75
 3. 3.0 3.1 Gifford (1989), p.72
 4. Gifford (1989), p.75
 5. Gifford (1989), pp.76–77
 6. Gifford (1989), pp.80–81
 7. Gifford (1989), p.106
 8. Gifford (1989), p.107
 9. Friedman, p.37
 10. Gifford (1989), pp.109–110
 11. Gifford (1989), p.110
 12. Gifford (1989), p.176
 13. 13.0 13.1 Gifford (1989), p.179
 14. Gifford (1989), pp.176 & 178
 15. Fleming, p.52
 16. Gifford (1989), pp.176–178. Blair Adam remains the home of the Adam family today.
 17. Donaldson, Peter R. (1996). "Conservation Case Study: The Duff House Project". Architectural Heritage VI: 33–48. 
 18. Gifford (1989), p.183
 19. Colvin, pp.56–59
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ஆடம்&oldid=2925803" இலிருந்து மீள்விக்கப்பட்டது