விரும்பிய ஒன்றிணைப்பு
Jump to navigation
Jump to search
விரும்பிய ஒன்றிணைப்பு (personal union) என்பது இரு அல்லது மேற்பட்ட இறையாண்மையுள்ள நாடுகளுக்கிடையே சட்டம் மூலம் ஏற்படுத்தப்பட்ட உறவாகும்; இருநாடுகளும் ஒரே நாட்டுத் தலைவரைக் கொண்டிருக்கலாம்.
விரும்பிய ஒன்றிணைப்புகள் பல்வேறு காரணங்களுக்காக உருவாகலாம். ஒரு நாட்டின் இளவரசி மற்ற நாட்டு அரசரை மணந்து இருவருக்கும் பிறக்கும் மகன் மூலமாக இணைவது பொதுவானதாகும். சில நேரங்களில் மற்ற நாட்டு தாக்குதல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வலுவான அண்டைநாட்டுடன் விரும்பி ஒன்றிணைவதும் உண்டு. இந்த ஒன்றிணைப்புகள் அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டங்களில் தெளிவாக வரையறுக்கப்படுகின்றன. இந்த இணைப்புகள் எளிதில் உடையக் கூடியனவாகும்.