விரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விரான் (விராஅன்) சங்ககால மன்னர்களில் ஒருவன். இவன் இரும்பை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவன். இவன் தேர்வண் விரான் என்று போற்றப்படுகிறான். இதனால் இவன் தேர்க்கொடை நல்கிய வள்ளல் எனத் தெரிகிறது. - பரணர் -நற்றிணை 350

கைவண் விராஅன் இரும்பை அரசன் என்று இவனைப் புலவர் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.(ஐங்குறுநூறு 58). கைவண்மை என்னும் கைவளம் கொடைத்தன்மையைக் குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரான்&oldid=701378" இருந்து மீள்விக்கப்பட்டது