வியட்நாமிய எண்குறிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வரலாற்றியலாக வியட்நாமிய மொழியின் எண்குறித் தொகுப்புகள் இருவகைப்படும்: இவற்றில் ஒருவகை தாயக வியட்நாமிய எண்குறி முறைமை யாகும்; மற்றொரு வகை சீன-வியட்நாமிய சொற்களால் ஆயதாகும். தற்கால வியட்நாமிய மொழியில் அன்றாடம் எண்ணுவதற்கும் கணிதப் பயனுக்கும் தாயக வியட்நாமியச் சொற்களே பயனில் உள்ளன. சீன-வியட்நாமிய சொற்கள், தற்கால ஆங்கில்லத்தில் கிரேக்க இலத்தீன் எண்குறிகள் பன்படுவதைப் போல, சில கோவைகளில் அல்லது சொற்றொடர்களில் மட்டுமே பயன்படுகின்றன. (எ.கா., bi- in bicycle போல). பதாயிரத்துக்கும் மேற்பட்ட எண்சார் அலகுகளில், தாயக வியட்நாம் வழக்கு இல்லாததால், சீன-வியட்நாமியச் சொற்கள் பயன்கொள்ளப்படுகின்றன.

கருத்தினம்[தொகு]

சீனப் பண்பாட்டு வட்டார மொழிகளில் அதாவது யப்பானிய மொழி, கொரிய மொழி போன்றவற்றில் இருவகை எண்குறி முறைமைகள் வழக்கில் உள்ளன. இவற்றில் ஒன்று தாயக வழக்கு சார்ந்ததாகும். மற்றொன்று சீன வழக்கு சார்ந்ததாகும். என்றாலும் சீனச் சொற்களே பொதுவாக வழங்குகின்றன. ஆனால் வியட்நாமிய மொழியில், மாற்றாக, அன்றாட வழக்கில் சீனம் சார்ந்த வழக்கு பயனில் இல்லை. ஒன்று முதல் ஆயிரம் வரை வியட்நாமியத் தாயக எண்குறிகளும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மில்லியன் போன்ற எண்சார் அலகுகளுக்குச் சீன-வியட்நாமிய எண்குறிகளும் பயனில் நிலவுகின்றன.

அடிக்குறிப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]