உள்ளடக்கத்துக்குச் செல்

வியட்நாமின் ஆட்சிப் பிரிவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புவியியல் மட்டத்தில், வியட்நாம் சமவுடைமைக் குடியரசு கீழ்வரும் முப்பெரும் மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது:

  • வடக்கு வியட்நாம்
  • நடுவண் வியட்நாம்
  • தென்வியட்நாம்

ஆட்சி வட்டாரங்கள்

[தொகு]
வியட்நாமிய ஆட்சி வட்டாரங்கள்
வியட்நாமிய ஆட்சி வட்டாரங்கள்

வியட்நாமிய அரசு வியட்நாமைப் பின்வரும் எட்டு ஆட்சிசார் வட்டாரங்களாகப் பிரிக்கிறது:

  • வடகிழக்கு
  • வடமேற்குசிவப்பாற்றுக் கழிமுகப் படுகை
  • நடுவண் வடக்குக் கடற்கரை
  • நடுவண் தெற்குக் கடற்கரை
  • நடுவண் மேட்டுச் சமவெளிகள்
  • தென்கிழக்கு
  • மேகாங் ஆற்றுக் கழிமுகப் படுகை
வியட்நாமின் வட்டாரங்கள்
புவியியல் மண்டலம் ஆட்சிசார் வட்டாரம்
வடக்கு வியட்நாம் (Bắc Bộ, Miền Bắc) வடகிழக்கு (Đông Bắc Bộ)
வடமேற்கு (Tây Bắc Bộ)
சிவப்பாற்றுக் கழிமுகப் படுகை (Đồng Bằng Sông Hồng)
நடுவண் வியட்நாம் (Trung Bộ, Miền Trung) நடுவண் வடக்குக் கடற்கரை (Bắc Trung Bộ)
நடுவண் தெற்குக் கடற்கரை (Duyên hải Nam Trung Bộ)
நடுவண் மேட்டுச் சமவெளிகள் (Tây Nguyên)
தென்வியட்நாம் (Nam Bộ, Miền Nam) தென்கிழக்கு (Đông Nam Bộ, Miền Đông)
மேகாங் ஆற்றுக் கழிமுகப் படுகை (Đồng Bằng Sông Cửu Long)
அல்லது தென்மேற்கு (Tây Nam Bộ, Miền Tây)

ஒவ்வொரு ஆட்சிசார் வட்டரத்திலும், முதல் அடுக்கு ஆட்சி அலகுகள் உள்ளன.

ஆட்சி அலகுகள்

[தொகு]

வியட்நாம் மூன்று ஆட்சி அடுக்குகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆட்சி அடுக்கிலும் வேறுபாட்ட ஆட்சி அலகுகள் அமைகின்றன:

நான்காம் அடுக்கில் சிற்றூர்களும் 9சோம், ஆப்) ஊர்களும் (இலாங், தோன், பான்) அடங்குகின்றன. என்றாலும் இவை அலுவல்முறைப்படி ஏற்கப்படுவதில்லை.

ஆட்சிசார் படிநிலை
மட்டம் முதல் இரண்டாம் மூன்றாம்
வகைமை நகராட்சி
(தான்போதிரூசு துவோசுதிரங் ஊவோங்)
நகரக மாவட்டம்
(குவான்)
சிறகம்
(பூவோங்)
பேரூர்Town
(தி சா)
சிறகம்
(பூவோங்)
ஊரகக் குமுகம்/ஊர்
(சாã)
ஊரக மாவட்டம்
(குயேன்)
நகரியம்/பேரூர்
(தித்திரான்)
குமுகம்
(சா)
மாகாணம்
(தின்)
நகராட்சி
(தான்போ திரூசு துவோசு தின்)
சிறகம்
(பூவோங்)
குமுகம்
(சா)
பேரூர்/நகர்
(தி சா)
சிறகம்
(பூவோங்)
குமுகம்
(சா)
ஊரக மாவட்டம்
(குயேன்)
பேரூர்/நகர்
(தித்திரான்)
குமுகம்
(சா)

முதல் அடுக்கு

[தொகு]

முதல் அடுக்கு ஆட்சிப் பிரிவில் கீழ்வரும் ஐந்து நகராட்சிகளும் 58 மாகாணங்களும் அமைகின்றன:

  • 5 நகராட்சிகள் - கனாய், கைப்போங், தாநாங், ஓ சி மின் நகரம், சாந்தோ
  • 58 மாகாணங்கள் – தியேன் பியேன், கோவாபின், இலை சாவு, இலாவோசை, சோன்லா, யேன்பை, வாசு கியாங், வாசுகான், சாவோபாங், கா கியாங், இலாங்சோன், பூத்தோ, குவாங் நின், தாய் நிகுயேன், துயேன் குவாங், வாசு நின், நாநாம், கை துவோங், குங்யேன், நாம்தின், நின்பின், தாய் பின், வின்பூசு, காதின், நிகேயான், குவாங்பின், குவாங் திரி, தாங்கோவா, தூவதியேன்-குயே, பிந்தின், பின் துவான், காங்கோவா, நின் துவான், பூயேன், குவாங்நாம், குவாங் நிகாய்,தாக்லாக், தாக்நோங், கியாலை, கோன் தும், இலாம் தோங், பாரியா-வோங்தாவு, பின் துவோங், பின் புவோசு, தோங்நை, தாய்நின், ஆங்கியாங், பெந்திரே, வாசுலியேயு, சாமவு, தோங்தாப், காவு கியாங், கியேன்கியாங், உலோங்கான், சோசு திராங், தியேன் கியாங், திராவின், வின்லோங்

இரண்டாம் அடுக்கு

[தொகு]

மேலும் காண்க:வியட்நாமின் மாவட்ட மட்ட ஆட்சிப்பிரிவுகள்

நகராட்சிகள் நகரக மாவட்டமாகவும் நகரியம் ஆகவும் ஊரக மாவட்டம் ஆகவும் பிரிக்கப்படுகின்றன. நகராட்சிக்குத் தனி அலுவல் தலைமையகம் அமையாது. உள்ளூராட்சி இருக்கை நடுவண் நகரக மாவட்டத்தில் அமையும்.

மாகாணங்கள் நகராட்சியாகவும், நகரியம்/பேரூர் ஆகவும் ஊரக மாவட்டம் ஆகவும் பிரிக்கப்படுகின்றன. மாகாணத்தின் தலைநகரமாக மாநகரமோ நகரியமோ அமையும்.

வியட்நாமின் 2011 ஆம் ஆண்டின் அண்மைய பொதுப் புள்ளியியல் அலுவலகத் தகவற்படி, 713 இரண்டாம் நிலை அடுக்கு ஆட்சி அலகுகள் உள்ளன.[1]

ஊரக மாவட்டம் நகரியம்/பேரூர் ஆகவும் நகரியம்/பேரூர் நகராட்சியாகவும் நிலை உயர்த்தப்படலாம்.

மூன்றாம் அடுக்கு

[தொகு]

நகரக மாவட்டங்கள் சிறகமாகவும் நகரியங்கள் சிரகங்களாகவும் குமுகங்களாகவும் பிரிக்கப்படுகின்றன. ஊரக மாவட்டங்கள் நகரியங்களாகவும் குமுகங்களாகவும் பிரிக்கப்படுகின்றன.

நகரக, ஊரக மாவட்டங்களுக்கு தலைமையகங்களாக நகரங்கள் ஏதும் அமைவதில்லை; ஆனால், வழக்கமாக நடுவண் நகரியத்திலோ அல்லது நடுவன் சிறகத்திலோ உள்ளூராட்சி இருக்கை அமையும். இதேபோல, நகரத்துக்கும் நகரியத்துக்கும் தலைமையகம் என ஏதும் அமைவதைல்லை. ஆனால், வழக்கமாக உள்ளூராட்சி இருக்கை நடுவண் சிறகத்தில் அமையும்.

வியட்நாமின் 2016 ஆம் ஆண்டின் பொதுப் புள்ளியியல் அலுவலகத் தகவற்படி, 11,162 மூன்றாம் அடுக்கு ஆட்சி அலகுகள் உள்ளன; இவற்றில் 1,581 சிறகங்களும் 603 நகரியங்களும் 8,978 குமுகங்களும் உள்ளன. [2]

நகரியம்/பேரூர்கள் வியட்நாம் மொழியில் தித்திரான் எனப்படுகின்றன; பண்ணை நகரியங்கள் மிகவும் சிலவாக உள்ளன; இது வியட்நாம் மொழியில் தித்திரான் நோங் திருவோங் எனப்படுகிறது. [3]

குமுகம் நகரியம்/பேரூர் ஆகவோ சிறகம் ஆகவோ நிலை உயர்த்தப்படலாம்.

பிற உட்பிரிவுகள்

[தொகு]

வியட்நாம் தேர்தல் தொகுதிகளாகவும் படைசார் வட்டாரங்களாகவும் பிரிக்கப்படுகின்றன.

நேரடித் தேர்தல்

[தொகு]

மேலும் காண்க வியட்நாமில் தேர்தல்

வியட்நாமின் தேசியச் நாடாளுமன்ற பேராளர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மக்களில் இருந்து நேரடையாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பகுதிக்குமான பேராளிகள் அப்பகுதி மக்கள்தொகையைச் சார்ந்தமையும். நடப்பில் வியட்நாம் நாடாளுமன்றத்தில் 500 பேராளிகள் உள்ளனர்.

தேர்தல் பிரிவுகள்

[தொகு]

தேர்தல் நோக்கில், ஒவ்வொரு மாகாணமும் நகராட்சியும் தோன் வி பாவு சோ எனும் தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை மேலும் குவூ போ பியேயு எனும் வாக்களிப்பு வட்டாரங்களாக பிரிக்கப்படுகின்றன. தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை மாகாணத்தின் அல்லது நகராட்சியின் மக்கள்தொகைக்கு ஏற்ப தேர்தலுக்குத் தேர்தல் வேறுபடுகிறது.

2011 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, வியட்நாமில் 183 தேர்தல் தொகுதிகளும் (அலகுகளும்) 89,960 வாக்களிப்பு வட்டாரங்களும் உள்ளனs.

படைசார் வட்டாரங்கள்

[தொகு]
வியட்நாம் படைசார் வட்டாரங்கள்

வியட்நாம் மக்கள் படை 8 படைசார் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

மேலும் காண்க

[தொகு]

வியட்நாமில் உள்ள நகரங்களின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]