விமான தரவு பதிவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
FDRம், அதனை ஆய்ந்தவரும்
விமான தரவு பதிவி. அதில் விமான தரவு பதிவி திறக்கவேண்டாம் என்று எழுதியிருக்கின்றது
விமானியறை குரல் பதிவி மற்றும் விமான தரவு பதிவி

விமான தரவு பதிவி(Flight data recorder(FDR)/Accident Data Recorder(ADR)) என்பது விமானத்தின் செயல்களையும் மற்றும் விமானம் பறக்கும்பொழுது விமானம் மற்றும் அதை சுற்றியுருக்கும் சூழலின் குணாதிசயங்களாகிய வேகம், பறக்கும் உயரம், வெப்பநிலை, காற்றழுத்தம் போன்ற 400க்கும் மேற்பட்ட குணாதிசயங்களை கணித்து அதை பதிவு செய்து வைத்துக்கொள்ளும் கருவியாகும்.

இக்கருவி விமானத்தின் கருப்புப் பெட்டிக்குள் இருக்கும். இரு பகுதிகளைக் கொண்ட கருப்புப் பெட்டிக்குள், ஒன்று விமானியறை குரல் பதிவி மற்றொரு பகுதி விமான தரவு பதிவி ஆகும். கருப்புப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இது பொறுத்தப்பட்டிருக்கும். விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சமிக்ஞைகள் வரும், இந்த சமிக்ஞைகளை வைத்து இதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியம். இதில் பதிவாகியுள்ள தரவுகளை வைத்து விமான விபத்திற்கான காரணங்களை அறிந்து கொள்ளமுடியும்.

பிரேசிலில் விமானவிபத்திற்கு பிறகு விமான தரவு பதிவியை மீட்டெடுக்கும் வான் படையினர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமான_தரவு_பதிவி&oldid=2784585" இலிருந்து மீள்விக்கப்பட்டது