வித்யா மால்வதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்யா மால்வதே
2023-இல் மால்வதே
பிறப்பு2 மார்ச்சு 1973 (1973-03-02) (அகவை 51)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிவானூர்திப் பணிப்பெண், நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2003–முதல்
வாழ்க்கைத்
துணை
  • அரவிந்த் சிங் பாகல்
    (தி. 1997; இற. 2000)
  • சஞ்சய் தயாமாDayma (தி. 2009)

வித்யா மால்வதே (Vidya Malvade-பிறப்பு: மார்ச் 2,1973) ஓர் இந்திய நடிகை ஆவார்.

இளமை[தொகு]

மால்வதே 2 மார்ச் 1973 அன்று இந்தியாவின் மகாராட்டிராவில் பிறந்தார்.[1][2] இவர் மூத்த நடிகை சுமிதா பட்டீலின் மருமகள் ஆவார்.  இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.[3]

தொழில் வாழ்க்கை[தொகு]

வித்யா ஒரு வானூர்திப் பணிப்பெண்ணாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் வடிவழகியாகப் பணி செய்யத் தொடங்கினார். மேலும் விளம்பரத் தயாரிப்பாளர் பிரகலாத் கக்கர் சில விளம்பரங்களுக்கு இவரைத் தேர்ந்தெடுத்தார். விக்ரம் பட் இந்தேஹா (2003) மூலம் இவரது நடிகையாக அறிமுகமானார். இது வசூலில் தோல்வியடைந்தது.[4] தொடர்ச்சியான தோல்வியுற்ற திரைப்படங்கள் மற்றும் பல விளம்பரங்களுக்குப் பிறகு, 2007ஆம் ஆண்டில் சக் தே இந்தியா படத்தில் இந்திய மகளிர் தேசிய மட்டைப்பந்து அணித் தலைவராக நடித்தார். இவரது மிகச் சமீபத்திய படம் யாரா சில்லி சில்லி.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

வித்யா சட்டம் பயின்று வானூர்தி பணிப்பெண்ணாகப் பணியாற்றினார்.[5] இவரது முதல் கணவர் அரவிந்த் சிங் பக்கா, அலையன்ஸ் ஏர் நிறுவனத்தில் விமானியாக இருந்தார்.[6] 2000ஆம் ஆண்டில் அரவிந்த் பயணம் செய்த வானூர்தி அலையன்ஸ் ஏர் விமானம் 7412, பட்னாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் மோதியதில் இவர் இறந்தார். 2009ஆம் ஆண்டில், வித்யா, சஞ்சய் தயாமாவை மணந்தார். இவர் அசுதோசு கோவரிகருடன் ஆசுகார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட லகான் திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளராகவும் இணை இயக்குநராகவும் பணியாற்றினார்.[7]

'கௌர் ஹரி தஸ்தான்' படத்தின் விளம்பரத்தில் வினய் பதக் உடன் வித்யா மால்வடே

மேற்கோள்கள்[தொகு]

  1. "Happy Birthday Vidya Malvade: 10 SIZZLING pics of the Chak De! girl to make your day : Bollywood News - Bollywood Hungama". Bollywood Hungama (in ஆங்கிலம்). 2018-03-02. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-07-16.
  2. "B'day Special: 48 साल की हुईं 'चक दे' गर्ल विद्या मालवडे, फिल्मों में आने से पहले थीं एयर होस्टेस" [B'day Special: 'Chak De' girl Vidya Malvade turns 48, was an air hostess before doing films]. News18 Hindi (in இந்தி). 2021-03-02. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-07-16.
  3. "Giving Life A Second Chance". Archived from the original on 21 August 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21 – via PressReader.
  4. "Inteha tests your patience". www.rediff.com. Archived from the original on 24 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
  5. I don’t socialise much – Vidya Malvade – Filmi Bhatein – It's All About Bollywood. Bollywood.allindiansite.com. Retrieved on 2011-06-23.
  6. "Alliance Air Boeing 737 crashes near Patna". Rediff.com. 2000-07-19. Archived from the original on 27 April 2008. பார்க்கப்பட்ட நாள் 2011-06-23.
  7. "There was a time I wanted to die". Free Press Journal (in ஆங்கிலம்). June 2, 2019. Archived from the original on 21 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_மால்வதே&oldid=3918507" இலிருந்து மீள்விக்கப்பட்டது