வித்யா சாகர் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வித்யா சாகர் குப்தா (Vidya Sagar Gupta) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இலக்னோ பல்கலைக்கழகத்தில் கலையியல் இளைஞர் மற்றும் சட்டப்பாடத்தில் இளநிலை பட்டம் ஆகிய கல்வித் தகுதிகளைப் பெற்றிருந்தார். உத்தரப் பிரதேச மாநில அரசியலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். இலக்னோ மாவட்டத்தில் உள்ள இலக்னோ கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேற்ந்தெடுக்கப்பட்டார். பாரதிய சனதா கட்சியால் தனது அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை என்றாலும் 1996 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். வித்யா சாகர் குப்தா பின்னர் 2019 ஆம் ஆண்டிலும் வெற்றி பெற்றார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய சனதா கட்சி அரசாங்கத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தொழில்நுட்பக் கல்வி வாரியத்தின் தலைவராக 3 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார். மாநிலத்தின் அமைச்சராகவும் இவர் செயல்பட்டார். [1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_சாகர்_குப்தா&oldid=3883214" இலிருந்து மீள்விக்கப்பட்டது