விதோம்-லார்சன் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விதோம்-லார்சன் கோட்பாடு (Widom–Larsen theory) 2005 ஆம் ஆண்டில் ஆலன் விதோம் மற்றும் இலூயிசு லார்சன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட குறைந்த ஆற்றல் அணுசக்தி எதிர்வினைகளுக்கு முன்மொழியப்பட்ட விளக்கமாகும். இந்த கருத்தை விவரிக்கும் ஆய்வுக் கட்டுரையில், புரோட்டான்கள் உலோக ஐதரைடு மேற்பரப்புகளில் [1] பலவீனமான இடைவினையால் கனமான எலக்ட்ரான்களைப் பிடிக்கும்போது குளிர் இணைவு கருவிகளில் [2] மிகக் குறைந்த வேக நியூட்ரான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று அவர்கள் கூறினர். இந்த கோட்பாடு பல தவறுகளையும், சமன்பாடுகளையும் கையாளும் ஒரு தெளிவற்ற வழியை அடிப்படையாகக் கொண்டது என்று விமர்சிக்கப்பட்டது. [3]

இந்த சிந்தனையை யோகேந்திர சிறீவத்சவா விதோம் மற்றும் லார்சனுடன் இணைந்து 2014 இல் விரிவுபடுத்தினார். கம்பி சோதனைகளில் உணரப்படும் நியூட்ரான் சூரிய சுடரொளி மற்றும் கிளரொளியில், இடியில் நியூட்ரான் உற்பத்தி ஆகிய செயல்பாடுகளில் விரிவடையும் நியூட்ரான்களுக்கான விளக்கமாக இருக்கலாம் என்று அவர் முன்மொழிந்தார். [4] இருப்பினும், நியூட்ரான் உற்பத்தி இடியில் உருவாகும் நியூட்ரான்களின் குறிப்பிடத்தக்க அங்கமாக இருக்க தனி எலக்ட்ரான்களின் நடைமுறைக்குப் புறம்பான செறிவுகள் தேவைப்படுவதால் இக்கோட்பாட்டுக்கான விளக்கம் கணக்கில் கொள்ளப்படவில்லை. [5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Widom, A; Larsen, L (April 2006). "Ultra Low Momentum Neutron Catalyzed Nuclear Reactions on Metallic Hydride Surfaces". The European Physical Journal C 46 (1): 107. doi:10.1140/epjc/s2006-02479-8. Bibcode: 2006EPJC...46..107W. 
  2. Anderson, Mark (23 October 2012). "Big Idea: Bring Back the "Cold Fusion" Dream. A new theory may explain the notorious cold fusion experiment from two decades ago, reigniting hopes of a clean-energy breakthrough". Discover Magazine.
  3. Tennfors, Einor (15 February 2015). "On the idea of low energy nuclear reactions in metallic lattices by producing neutrons from protons capturing "heavy" electrons". European Journal of Physics 128 (2): 15. doi:10.1140/epjp/i2013-13015-3. Bibcode: 2013EPJP..128...15T. https://www.researchgate.net/publication/260246109. பார்த்த நாள்: 24 March 2017. 
  4. Srivastava, Y; Widom, A; Larsen, L (October 2014). "A primer for electroweak induced low-energy nuclear reactions". Pramana – Journal of Physics. http://www.ias.ac.in/describe/article/pram/075/04/0617-0637. பார்த்த நாள்: 24 March 2017. 
  5. Babich, L P; Bochkov, E I; Kutsyk, I M; Rassoul, H K (13 May 2014). "Analysis of fundamental interactions capable of producing neutrons in thunderstorms". Physical Review D 89 (9): 093010. doi:10.1103/PhysRevD.89.093010. Bibcode: 2014PhRvD..89i3010B. 
  6. Babich, L P (2014). "Fundamental processes capable of accounting for the neutron flux enhancements in a thunderstorm atmosphere". Journal of Experimental and Theoretical Physics 118 (3): 375–383. doi:10.1134/S1063776114030017. Bibcode: 2014JETP..118..375B. 
  7. Babich, L P (8 October 2015). "Analysis of a laboratory experiment on neutron generation by discharges in the open atmosphere". Physical Review C 92 (4): 044602. doi:10.1103/PhysRevC.92.044602. Bibcode: 2015PhRvC..92d4602B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதோம்-லார்சன்_கோட்பாடு&oldid=3059184" இலிருந்து மீள்விக்கப்பட்டது