விதியை வெல்ல நினைத்த அரசன் (தந்திரக்கதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விதியை வெல்ல நினைத்த அரசன் என்பது ஒரு இந்திய நாட்டுப்புற தந்திரக் கதையாகும்,[1] பழுப்பு தேவதைக்கதைகள் புத்தகத்தில் ஆண்ட்ரூ லாங்கால் சேர்க்கப்பட்டுள்ளது.

தனது மகளுடன் ஒரு ராஜா வேட்டையாடும்போது ஒருமுறை காட்டிற்குள் தொலைந்து போனார், அங்கே ஒரு துறவியைச் சந்தித்தார், அவர் அந்த அரசனின் மகள் வடதிசை ராஜாவின் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு அடிமைப் பெண்ணின் மகனை தான்  திருமணம் செய்து கொள்வார் என்று முன்குறித்தார். அரசன் அந்த  காட்டை விட்டு வெளியேறியவுடன், வடக்கின் அரசனுக்கு பரிசுகளை அனுப்பி அந்த அடிமைப் பெண்ணையும் அவளுடைய மகனையும் கொல்ல சொல்லி மடல் அனுப்பினார். அதன்படி அந்த அரசனும் அவர்களை காட்டுக்குள் அழைத்துச் சென்று பெண்ணின் தலையை வெட்டி, குழந்தையை கொல்லாமல் அப்படியே விட்டுவிட்டார்.

ஆடுகளை வளர்க்கும் ஒரு விதவை தனது சிறந்த ஆடுகளில் ஒன்று மேய்ச்சலுக்கு சென்று திரும்பி வரும் போது அதன் மடியில்  துளி பால் கூட இல்லாமல் வருவதை தொடர்ச்சியாக கவனித்து வந்தார். அதை பின்தொடர்ந்து சென்று பார்க்கையில் ஒரு சிறுவன் அந்த ஆட்டின் பால் முழுவதையும் குடிப்பதை கண்டறிந்தார். வயதான காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்பதால் தன் மகனைப் போல நினைத்து அந்த குழந்தையை எடுத்து வந்து வளர்த்து வந்தாள்.

சிறுவன் பெரியவனாக வளர்ந்ததும், ஒரு நடைபாதை வியாபாரியின் கழுதை தன் தாயின் முட்டைக்கோஸைத் தின்னுவதைப் பார்த்து அதை அடித்து விரட்டினான். ஆனால் அந்த பையன் நடைபாதை வியாபாரியைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக கூடுதல் விவரணைகளுடன் அங்குள்ள பிற சிறுவர்களால் ஒரு கதை நடைபாதை வியாபாரியிடம் சொல்லப்பட்டது. எனவே அந்த  சிறுவனை தண்டிக்க வேண்டும் என்று அரசனிடம் அந்த வியாபாரி புகார் செய்தார். அதன்படி அவனை பிடிக்க வீரர்கள் அனுப்பப்பட்டார்கள்  அதை தவிர்க்க எண்ணி அந்த வயதான விதவைப்பெண் அவனை மன்னிக்கச்சொல்லி அரசனிடம் மன்றாடினார், அரசனோ,  இவ்வளவு வயதான ஒரு பெண்ணுக்கு இவ்வளவு இளமையாக ஒரு மகன் எப்படி இருக்க முடியும் என்று நம்பாமல், அவள் அவனை எங்கிருந்து பெற்றாள் என்று கேட்க, முழுக் கதையையும் கேட்ட அரசனுக்கு அந்த பையன் யார் என்று அறிந்தான்.

அவனை நேரடியாக கொள்ள முடியாத அரசனும், அவன் தன படையில் சேர்ந்தால் அவனை கொள்ளாமல் விடுவதாக சொன்னான். அதன்படி படையில் சேர்ந்த பையனை இராணுவ வாழ்க்கை சிறிதளவும் பாதிக்கவில்லை ஆயினும் அந்த பையன் மிகவும் ஆபத்தான பணிகளுக்கு அனுப்பப்பட்டு தான்  ஒரு தலை சிறந்த வீரன் என்பதை நிரூபித்தான். அதனால் அவன் மன்னரின் மெய்க்காப்பாளரில் ஒருவனாகவும் சேர்க்கப்பட்டு அவரை ஒரு கொலைகாரனிடமிருந்து காப்பாற்றினார். ராஜா அவரை ஒரு உதவியாளராக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார், மேலும் ராஜாவுக்கான அவரது பணிகளில் இருக்கும்போது, அவர் தொடர்ந்து தாக்கப்பட்டார், ஆனால் எப்போதும் தப்பிதுக்கொண்டே இருந்தான். இறுதியாக, ராஜா அவனை கொல்ல சொல்லி ஒரு ஓலையுடன் அவரது பொறுப்பில் இருந்த தொலைதூர ஆளுநருக்கு  ஒரு செய்தியை அனுப்பினார். ஆனால் அந்த ஆளுநரின் பொறுப்பில் தான் முன்னர் சொல்லப்பட்ட இளவரசியும் இருந்தாள். முழு அரண்மனையும் பகல் வெப்பத்தை தாங்காமல் தூங்கிக் கொண்டிருந்தது,மிகவும் குறும்புக்காரியான அந்த  இளவரசியோ எழுந்து சுற்றிக் கொண்டிருந்தாள், அந்த வேளையில் செய்தி கொண்டுவருபவரை கொல்லும் செய்தியைக் கொண்டு வந்த இளைஞனை கண்டாள். அந்த செய்தியை இளவரசிக்கு அவரை திருமணம் செய்து கொடுக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடும் கடிதமாக மாற்றினார்.

அவர்கள் திருமணம் செய்து கொண்ட செய்தியைப் பெற்ற அரசன், சிறுவனைக் காயப்படுத்தும் முயற்சியைக் கைவிட்டான்.

பகுப்பாய்வு[தொகு]

நாட்டுப்புறவியலாளரான ஸ்டித் தாம்சன், நாட்டுப்புற கதை என்ற தனது அடிப்படைப் படைப்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறார், எந்த காரணமாயினும் அந்த சிறுவனே இளவரசியை மணக்கவேண்டும் என்பது விதியாகும் என்பதே இந்திய இலக்கிய வரலாற்றில் காணப்படுகிறது, அது அதன் பழமையானது.[2]

'''விதியால் பாதுகாக்கப்பட்ட ஒரு ஏழைப் பையன்''' என்பதைப்  பற்றிய கலாச்சாரங்கள் நிறைந்த இந்தக் கதை பல வகைகளைக் கொண்டுள்ளது.[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • தி டெவில் வித் தி திரீ கோல்டன் ஹேர்ஸ்
  • மூன்று அற்புதமான பிச்சைக்காரர்களின் கதை
  • மீன் மற்றும் மோதிரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Andrew Lang, The Brown Fairy Book, "The King Who Would Be Stronger Than Fate"
  2. Thompson, Stith. The Folktale. University of California Press. 1977. pp. 205-207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-03537-2
  3. Čechová, Mariana; Klimková, Simona. Studi Slavistici; Florence Vol. 16, (2019): 77-89. DOI:10.13128/Studi_Slavis-7474

மேலும் படிக்க[தொகு]

  • ஜாங், ஜுவென். "முன்கூட்டிய மனைவி" (ATU 930A) கதையில் "மூன் மேன்" உருவத்தின் பரிமாற்றத்திற்கான கலாச்சார அடிப்படை." தி ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் ஃபோக்லோர் 127, எண். 503 (2014): 27-49. doi:10.5406/jamerfolk.127.503.0027.