விண்டோஸ் லைவ்
Jump to navigation
Jump to search
விண்டோஸ் லைவ் (Windows Live) என்பது மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் பல சேவைகளை குறிக்கும். இது கூகிள் போன்ற போட்டியாளர்களுடன் போட்டிபோடக்கூடிய வகையில் எம்எஸ்என்-இன் மீளுருவாக்கம் ஆகும். இது பொதுவாக உலாவிகளூடாக இயங்கக்கூடியதாகும். இந்தப் பயன்பாடுகளும் அதன் தரவுகளும் உள்ளூர்க் கணினிகளில் அல்லாமல் வழங்கிகளிலேயே சேமிக்கப்படும். இச்சேவையும் வரவிருக்கின்ற கூகிள் சேவைகளும் பயன்பாட்டு மென்பொருட்களை கணினியில் நிறுவாமல் உலகில் எங்கிருந்தும் இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ளமாறு அமைய இருப்பதே வருங்காலத்தின் குறிப்பிடத்தக்க போக்காக இருக்கும் என்று கருதப்படுகின்றது.
வெளியிணைப்புகள்[தொகு]
- விண்டோஸ் லைவ் இணையத்தளம். (ஆங்கில மொழியில்)