உள்ளடக்கத்துக்குச் செல்

விண்டோஸ் பணி மேலாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விண்டோஸ் பணி மேலாளர் அல்லது விண்டோஸ் பணி நிர்வாகி (Windows Task Manager) விண்டோஸ் எண்டி குடும்ப இயன்குதளங்களின் பிரயோகங்கள், செயலிகளின் வினைத்திறன், நினைவகப் பாவனை, வலையமைப்புச் செயற்பாடு, உள்நுளைந்த பயனர்கள் போன்ற விபரங்களைத் தருவதாகும். பணிமேலாளர் ஊடாக விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் செயலை வலுக்கட்டாயமாக இடைநிறுத்தவோ அல்லது மீள்துவக்கம் செய்யவோ இயலும். அத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் இருந்தால் எந்தச் செயலியுடன் இணைந்து பணியை மேற்கொள்ளவது என்பதையும் தீர்மானித்துக் கொள்ளலாம். விண்டோஸ் பணிமேலாளர் விண்டோஸ் எண்டி 4.0 இல் இருந்து அறிமுகப்படுத்தப் பட்டது. இதற்கு முன்னர் பணி நிரல்கள் பயன்படுத்தப் பட்டது.

விண்டோஸ் பணி மேலாளரை ஆரம்பித்தல்

[தொகு]
  1. விண்டோஸ் பணிச்சூழலில் கீழே கிடையாக் கிடக்கும் கோட்டுப் பகுதியாக விண்டோஸ் டாஸ்க் பாரில் வலது சொடுக்கலின் (Right Click) பணி மேலாளரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்.
  2. Ctrl+Shift+ESc விசைகளை ஒருங்கே அழுத்துவன் மூலம்.
  3. விண்டோஸ் எண்டி, விண்டோஸ் 2000, விண்டோஸ் விஸ்டா Ctrl+Alt+Delete விசைகளை ஒருங்கே அழுத்துவதன் விண்டோஸ் செக்கியூரிட்டி விண்டோ ஆரம்பிக்கும் அதில் பணி மேலாளரைத் தேர்ந்தெடுக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பியில் Ctrl+Alt+Del அல்லது Ctrl+Shift+ESc மூலம் (Welcome Screen disable ஆக இல்லாதிருந்தால்).
  4. taskmgr என்ற கட்டளையைத் தட்டச்சுச் செய்வதன் மூலம்

குறிப்பு:

  1. பொதுவாக பணி மேலாளர் 2 செக்கணுக்கு ஒருமுறை அதன் நிலையை மேம்படுத்திக் கொள்வார்.
    1. இதை . View->Update Speed -> High எனத் தேர்ந்தெடுத்தால் செக்கணுக்கு இரண்டு முறையும்
    2. Views->Update Speed -> Low எனத் தேர்ந்தெடுத்தால் 4 செக்கணுக்கு 1 முறையும் மேம்ப்டுத்திக்கொள்ளும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோஸ்_பணி_மேலாளர்&oldid=2229534" இலிருந்து மீள்விக்கப்பட்டது