விடுதலைக்கு விலங்கு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விடுதலைக்கு விலங்கு
விடுதலைக்கு விலங்கு.jpeg
விடுதலைக்கு விலங்கு புத்தகத்தின் முதல் பக்க அட்டை
நூலாசிரியர்க. பா. இராபர்ட் பயஸ்
நாடுஇந்தியா
இலங்கை
மொழிதமிழ் மொழி
வகைதன்வரலாறு
வெளியீட்டாளர்களம் வெளியீடு, சென்னை

விடுதலைக்கு விலங்கு (இந்தியாவின் முன்னாள் பிர‌தமர் இராசீவ் காந்தி கொலை வழக்கு வெளிவராத உண்மைகளும், துயர‌ங்களும்), இராஜீவ் காந்தி கொலை தொடர்பாக வெளிவந்துள்ள புத்தகம்.

கொலை வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் இராபர்ட் பயசின் தன்வரலாற்றுக் குறிப்புகளின் பின்னணியிலும் இந்த நூல் இராஜீவ் காந்தி கொலை வழக்கை அணுகுகின்றது. சிபிஐ புலனாய்வுக் குழுவின் விசாரணை முறைகளை விமர்சிக்கிறது. ஈழத் தமிழரும், அவரது சொந்தங்களும் அனுபவிக்கும் கடுந்துயரங்களை பதிவு செய்கிறது.

பத்திரிக்கையாளர் அய்யநாதன், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், மனித உரிமையாளர் பால் நியூமென் ஆகியோர் முன்னுரை எழுதியிருக்கிறார்கள். வழக்கறிஞர் தடா சந்திரசேகரரிடம் இராபர்ட் பயஸ் அளித்த வாழ்க்கை மற்றும் வழக்குக் குறிப்புகளை, வழக்கறிஞர் மணி. செந்தில் புத்தகமாக ஆக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]