உள்ளடக்கத்துக்குச் செல்

விசு காலம் (சோதிடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விசு (விஷு) காலம் என்றால் பகல் பொழுதும் இரவுப் பொழுதும் சம அளவாய் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் என்று தமிழ்ப் (இந்து) பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன.

விசு (விஷு) புண்ணிய காலம்

[தொகு]
எண் தமிழ் மாதம் தேதி (நாள்) புண்ணிய காலம்
1 சித்திரை முதல் தேதி (நாள்) மேஷ (சித்திரை) விசு (விஷு) புண்ணிய காலம்
2 ஐப்பசி முதல் தேதி (நாள்) துலா (ஐப்பசி) விசு (விஷு) புண்ணிய காலம்

ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் சித்திரை மாதம் முதல் நாளும், ஐப்பசி மாதம் முதல் நாளும் முறையே மேஷ (சித்திரை) விசு (விஷு) புண்ணிய காலம், துலா விசு (விஷு) புண்ணிய காலம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது சித்திரை மாதத்தில் என்பதால் இந்த மாதத்தின் முதல் நாளினை மேஷ விஷு (உத்தர அயனம்) புண்ணிய காலம் என்று கணக்கிடுகிறார்கள். இது போல சூரியன் துலா ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது ஐப்பசி மாதத்தில் என்பதால் இந்த மாதத்தின் முதல் நாளினை துலா விஷு (தட்சிண அயனம்) புண்ணிய காலம் என்று கணக்கிடுகிறார்கள் தமிழ் சோதிடக் கணிதப்படி சித்திரை முதல் நாள் மற்றும் ஐப்பசி முதல் நாள் ஆகிய இரு நாட்களிலும் பகல் மற்றும் இரவுப் பொழுதுகள் சரிசமமாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசு_காலம்_(சோதிடம்)&oldid=1022398" இலிருந்து மீள்விக்கப்பட்டது