விசும்பு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விசும்பு, எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 12 அறிவியல் புனைகதைகளின் தொகுதி. இக்கதைகள் ஆரம்பத்தில் திண்ணை இணைய இதழில் வெளிவந்து பின்னர் எனி இந்தியன் பதிப்பகம் அதன் பின் கிழக்கு பதிப்பகத்தால் தொகுப்பாக வெளியிடப்பட்டது. மேலை அறிவியலுடன் இந்திய பாரம்பரிய அறிவியல் சந்திக்கும் புள்ளியில் இக்கதைகள் இயங்குகின்றன.

உள்ளடக்கம்[தொகு]

இத்தொகுப்பில் கீழ்க்கண்ட கதைகள் உள்ளன.

  • ஐந்தாவது மருந்து
  • இங்கே, இங்கேயே…
  • விசும்பு
  • பூர்ணம்
  • பித்தம்
  • உற்று நோக்கும் பறவை
  • நம்பிக்கையாளன்
  • நாக்கு, தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு

இந்த தொகுதியில் உள்ள பித்தம் , ஐந்தாவது மருந்து போன்ற கதைகள் சித்த மருத்துவப் பின்னணி கொண்டவை. அறிவியல் புனைகதைகள் மேலைநாட்டில் பரவலாக எழுதப்படுகின்றன. அவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழிலும் நிறைய கதைகள் எழுதப்படுகின்றன. அவற்றுக்கு ஆதாரமாக இருப்பது மேலைநாட்டு அறிவியல். தமிழ்நாட்டுக்கே உரிய சில அறிவியல்களங்கள் உண்டு. சித்தமருத்துவம், புராதனமான ரசவாதம், தியானம் போன்றவை. அவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழுக்கே உரிய அறிவியல் புனைகதைகளை எழுதமுடியும். அந்த நோக்கில் இந்த கதைகளை எழுதியிருப்பதாக முன்னுரையில் ஜெயமோகன் சொல்கிறார். இக்கதைகள் அறிவியல் புனைகதை என்ற வகைக்குள் எவ்வாறு பொருந்துகிறது என்பதை விளக்கும் ஜெயமோகன், தரமான அறிவியல் புனைவு என்பது நடைமுறை அறிவியலுடன் நமது ஆழ்மனம் தனக்குரிய பாரம்பரிய அறிவியல் முறையுடன் தொடர்பு கொள்ளும்பொழுது உருவாகிறது என்கிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசும்பு_(நூல்)&oldid=3078083" இலிருந்து மீள்விக்கப்பட்டது