விசாகப்பட்டினம் பொது நூலகம்

ஆள்கூறுகள்: 17°43′46″N 83°18′26″E / 17.729453°N 83.307085°E / 17.729453; 83.307085
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசாகப்பட்டினம் பொது நூலகம்
Visakhapatnam Public Library
நாடுஇந்தியா
வகைபொது நூலகம்
அமைவிடம்துவாரகா நகர், விசாகப்பட்டினம்
சேவைப்பகுதிபெருநகர விசாகப்பட்டின நகராட்சி மன்றத்தின் பரப்பு
அமைவிடம்17°43′46″N 83°18′26″E / 17.729453°N 83.307085°E / 17.729453; 83.307085
Collection
அளவு54000 புத்தகங்கள்
Access and use
Population served12 இலட்சங்கள்
ஏனைய தகவல்கள்
இயக்குநர்முனைவர் எசு. விஜயகுமார்
Parent organizationவிசாகப்பட்டினம் பொது நூலகச் சங்கம்
இணையதளம்http://www.visakhapatnampubliclibrary.org/
Map
Map

விசாகப்பட்டினம் பொது நூலகம் (Visakhapatnam Public Library) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள ஒரு பொது நூலகமாகும்.[1] இலவச நூலக சேவைகள், நல்ல வாசிப்புச் சூழல், போதுமான சமூக இடைவெளி, இலவச இணைய இணைப்பு மற்றும் படிக்கும் அறை போன்ற சேவைகளை பொது மக்களுக்கு இந்நூலகம் வழங்குகிறது. கொள்கை ஆய்வுகளுக்கான மையம் ஒன்று சகோதர அமைப்பு கட்டிடத்தில் இணைந்து அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

விசாகப்பட்டினம் பொது நூலகம் 1996 ஆம் ஆண்டில் பொதுமை எண்ணம் கொண்ட குடிமக்கள் குழுவால் உருவாக்கப்பட்டது. நூலகத்திற்காக 1700 சதுர மீட்டர் நிலத்தை அப்போதைய விசாகப்பட்டினம் நகரத் தந்தை சப்பம் அரி வழங்கினார். 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஆந்திராவின் ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா நூலகத்தை திறந்து வைத்தார். 2004 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதி முதல் நூலகம் செயல்படத் தொடங்கியது.[2]

விசாகப்பட்டினம் பொது நூலகம் பெருநகர விசாகப்பட்டினம் மாநகராட்சிக்கு சொந்தமானதாகும். நூலகத்தின் விவகாரங்களை இயக்குவதற்கு சிறந்த குடிமக்களை உள்ளடக்கிய விசாகப்பட்டினம் பொது நூலக சங்கம் என்ற ஓர் அறக்கட்டளை அமைப்பு உருவாக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவ்வமைப்பின் தலைவர் முனைவர் எசு. விஜய குமார் மற்றும் செயலாளர் டி.எசு. வர்மா என்று அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]