விங் சுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Wing Chun
இப் மேன், புரூசு லீ இருவரும் பயிற்சியில்..
"双黐手" (Seung Chi Sau) என்றால் "இரட்டை ஒட்டுக் கரங்கள்"
வேறு பெயர்Ving Tsun, Wing Tsun, Wing Tsung, Yong Chun, Weng Chun, Wyng Tjun, Ving Tjun, Wing Tzun, Wing Tschun
நோக்கம்Strike (attack), Grappling#Stand-up grappling, Clinch fighting#Trapping techniques
தோன்றிய நாடுபொசன், சீனா
உருவாக்கியவர்வழித்தோன்றல் அறியப்படவில்லை. எட்டு வழித்தோன்றல்..
பெயர் பெற்றவர்கள்(காண்க #குறிப்பிடத்தக்க பயிற்சியாளர்கள்)
ParenthoodShaolin Kung Fu / Nanquan (martial art)
வழிவந்த கலைJeet Kune Do[1]
Wing Chun
பண்டைய சீனம் 詠春
நவீன சீனம் 咏春
Literal meaning"singing spring"[2][3]

விங் சுன் (Wing Chun, சீன:詠春அல்லது咏春, "பாட்டு வசந்தம்") என்பது ஒரு தற்காப்புக் கலையாகும். இது தெற்கு சீன குங்ஃபூவின் வடிவங்களில் ஒன்றாகும். இது நெருங்கிய கை-க்கு-கை சண்டை, விரைவான-தீ குத்துகள், நேரடியான செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இது எதிராளியின் நடுக் கோட்டில் பிடிப்பதையும், ஒட்டிக்கொள்வதையும் வலியுறுத்தும், தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் தாக்குதலையும், தற்காப்பையும் கற்றுத்தரும் கலையாக உள்ளது. இவ்விரண்டும் எதிராளியின் சக்தி, தொட்டுணரக்கூடிய உணர்திறன் முதலியவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், எதிராளிக்காக நிகழ்த்தப்படுகிறது.

தோற்றம்[தொகு]

விங் சுனின் உறுதியான தோற்றம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால், இது பொதுவாக தெற்கு சீன தற்காப்புக் கலைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. இக்கலையின் தோற்றத்திற்கு, குறைந்த பட்சம் எட்டு தனித்துவமான பரம்பரைகள் அடிகோலின என்பர்.[4] விங் சுனின் வரலாறு, ஆவணப்படுத்தலில் உள்ள சிக்கல்கள் எழுத்தில் இல்லாமல், ஆசிரியரிடமிருந்து மாணவருக்கு வாய்வழியாக கற்பிக்கும் வழிமுறையைப் பின்பற்றியதே, இதற்குக் காரணமெனக் கருதப்படுகிறது. மற்றொரு காரணம், குயிங் எதிர்ப்பு கிளர்ச்சி இயக்கங்களுடனான, அதன் தொடர்புகளின் காரணமாக, அதன் வளர்ச்சி, இரகசியம் ஆக மாறியது என்பர்.[5]

படிவங்கள்[தொகு]

பட்டாம்பூச்சி வாள்கள்
மர போலி

விங் சுனில் உள்ள வடிவங்களின் மிகவும் பொதுவான அமைப்பு மூன்று வெற்று கை வடிவங்கள், இரண்டு ஆயுத வடிவங்கள்: இடிராகன் கம்பம், பட்டாம்பூச்சி வாள்கள், ஒரு மர போலி வடிவம். [6] இடிராகன் கம்பம் அல்லது இடிராகன் கொடி என்பது புறக்கருவி இல்லாமல் செய்யும் பயிற்சி முறை ஆகும். இதன்படி, சமமாகப் படுத்துக் கொண்ட ஒருவர், படிப்படியாக காலைத் துக்கும் நிலை எனலாம். பொதுவாக இடுப்புக்கு கீழுள்ள கால்களை மட்டுமே ஒருவர் தூக்க இயலும். ஆனால் இப்பயிற்சியில், தலையைத் தவிர, பிற உடல்பாகங்களை படுத்துக் கொண்டு தூக்குதலைக் கற்பிக்கிறது. இப்பயிற்சியின் இறுதி நிலையில் வடிவம் போன்று உடலை நிறுத்துவர். தலைத் தரையிலும், பாதம் மற்ற உடற்பகுதிகளை விட உயரமாகவும் இருக்கும். தலைக்கும் காலுக்கும் இடைபட்ட பகுதிகள் பாதங்களை விட படிப்படியாக உயரம் குறைந்து நிறுத்தப்படும்.[7]

குறிப்பிடத்தக்க பயிற்சியாளர்கள்[தொகு]

விங் சுனின் சில குறிப்பிடத்தக்க பயிற்சியாளர்கள் இப் மேன் மற்றும் அவரது மகன்கள் இப் சுன், இப் சிங், மாஸ்டர் வோங் ஷுன்-லியுங், சூ ஷோங் டின், லீ ஷிங், ஹோ காம் மிங், சிஜே எஸ்பி, தற்காப்புக் கலைஞர் புரூஸ் லீ, ஜாக்கி சான், சம்மோ ஹங், டோனி யென் ஆகியோரை கூறுவது வழக்கமாகும்.

இதையும் காணவும்[தொகு]

  • வேங் சுன் (Weng Chun) என்ற சீன தற்காப்பு கலையையும் ஒப்பிட்டறிக.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chris Crudelli (2008). The Way of the Warrior. Dorling Kindersley Ltd. பக். 316. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-14-0533-750-2. https://books.google.com/books?id=QlI0fxSm1vgC. Rafiq, Fiaz (2020). Bruce Lee: The Life of a Legend. Foreword by Diana Lee Inosanto. Birlinn. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-78885-330-9. https://archive.org/details/bruceleelifeofle0000rafi. 
  2. Semyon, Neskorodev (2016). Mantis fist in Wing Chun. பக். 4. "The origin... One of them states, that this style was created by five masters of Southern Shaolin, who made this work in the Hall of Praising Spring. Other legend says, that the style was elaborated by the women Wing Chun (Singing Spring), the daughter of novice of Southern Shaolin" [self-published source]
  3. Womack, Mari (2003). Sport as Symbol: Images of the Athlete in Art, Literature and Song. McFarland & Company. பக். 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780786415793. https://books.google.com/books?id=RJPuAAAAMAAJ&q=sing+spring. "village girl named Yim Wing Chun, which means to sing spring" 
  4. Benjamin N. Judkins & Jon Nielson (2015). The Creation of Wing Chun: A Social History of the Southern Chinese Martial Arts. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1438456959. https://books.google.com/books?id=H7s0CgAAQBAJ. 
  5. Chu 2015, pg. 1-2, 106-108
  6. "Wing Chun Forms".
  7. https://www.youtube.com/watch?app=desktop&v=3FuwY3Z4ux8
"https://ta.wikipedia.org/w/index.php?title=விங்_சுன்&oldid=3937268" இலிருந்து மீள்விக்கப்பட்டது