விக்யான் கௌரவ் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்யான் கௌரவ் விருது (Vigyan Gaurav Award) இந்தியாவின் உத்திரபிரதேச அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தால் வழங்கப்படும் அறிவியல் ஆராய்ச்சிக்கான வாழ்நாள் சாதனை விருது ஆகும். விக்யான் கௌரவ் சம்மான் என்ற பெயராலும் இவ்விருது அழைக்கப்படுகிறது.[1] உத்திரபிரதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் விக்யான் ரத்னா விருதையும் வழங்குகிறது. ₹ 100,000 ஆக இருந்த விருது தொகை 2013 ஆம் ஆண்டு முதல் ₹ 500,000 மதிப்பாக உயர்த்தப்பட்டது.[2] விக்யான் கௌரவ் விருது உத்திரப் பிரதேச அரசாங்கத்தால் வழங்கப்படும் மிக உயர்ந்த அறிவியல் தொடர்பான விருது ஆகும்.[3]

விருது பெற்றவர்கள்[தொகு]

  • 2000 - வேத் பிரகாசு கம்போச்சு
  • 2001 - 2002 - பிரேம் சந்த் பாண்டே
  • 2002-03 - முனைவர். இலால்ச்சி சிங் - பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்[4]
  • 2003-04 - முனைவர். இயே.எசு. யாதவ் - இந்திய இரசாயன தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர், ஐதராபாத்து.[5]
  • 2003-04 - முனைவர். ஆர்.பி. பாச்சுபாய் - மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பின் இயக்குனர், சண்டிகர்[6]
  • 2005-06 - பேராசிரியர் இயாவேத் இக்பால்- இயக்குநர், ஆயுள் அறிவியல் நிறுவனம், ஐதராபாத்து பல்கலைக்கழக வளாகம், கச்சிபௌலி, ஐதராபாத்து.
  • 2008-09 - பேராசிரியர். அனில் குமார் தியாகி - தில்லி பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் துறைத் தலைவர்[7]
  • 2008-09 - பேராசிரியர். கபிருதீன் - வேதியியல் துறை, அலிகார் முசுலிம் பல்கலைக்கழகம்[7]
  • 2010-11 - பேராசிரியர். ஆர்.கே. சர்மா - சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர்[8]
  • 2010-11 - பேராசிரியர். சுனில் பிரதான் - சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் நரம்பியல் நிபுணர்[8]]
  • 2010-11 - பேராசிரியர் முகமது இக்பால் - இயாமியா அம்தார்ட்டு பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பேராசிரியர்[8]
  • 2010-11 - சந்திர சேகர் நௌடியல் - தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் [8]
  • 2015-16 - பேராசிரியர். நிர்மல் குமார் குப்தா - கார்டியோ வாசுகுலர் தொராசிக் அறுவை சிகிச்சைத் தலைவர் , சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் , லக்னோ

மேற்கோள்கள்[தொகு]

  1. "Science award for two PGI doctors". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Lucknow. 29 November 2011. Archived from the original on 2 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2 January 2014.
  2. "HCL to promote IT City". Daily Pioneer. 28 December 2013. பார்க்கப்பட்ட நாள் 2 January 2014.
  3. India Today. Thomson Living Media India Limited. 2006. பக். 59. https://books.google.com/books?id=iWlDAAAAYAAJ. 
  4. "Vice-Chancellor Dr. Lalji Singh". Banaras Hindu University. Archived from the original on 4 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2014.
  5. "IICT Director bags award". Hyderabad: தி இந்து. 6 March 2004. பார்க்கப்பட்ட நாள் 2 January 2014.
  6. "Vigyan Gaurav Samman for Dr Bajpai". The Tribune. Chandigarh. 26 February 2004. பார்க்கப்பட்ட நாள் 2 January 2014.
  7. 7.0 7.1 "2 scientists honoured with Vigyan Gaurav Samman". Times of India. 30 March 2010. பார்க்கப்பட்ட நாள் 2 January 2014.
  8. 8.0 8.1 8.2 8.3 "Award for excellence in science". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Lucknow. 30 November 2011. Archived from the original on 2 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2 January 2014.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்யான்_கௌரவ்_விருது&oldid=3742629" இலிருந்து மீள்விக்கப்பட்டது